tamil.samayam.com :நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!
இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷன் உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து, நாட்டின்
முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது. முழுப்
பயன்பாட்டுக்கு வரும் முன்னர், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு
உட்படுத்தப்படுகிறது.
வழக்கமான
இன்ஜின்கள் கொண்ட பேருந்துகள் 20% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக
மாற்றுகிறது. ஆனால் ஸ்டார்பஸ் எரிபொருள் இன்ஜின் கொண்ட பேருந்துகளில்
40-60% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. அதாவது மூன்று
மடங்கு அதிகம். ஸ்டார்பஸ் எரிபொருள் வாகனங்கள் எரிபொருள் பயன்பாட்டை 50%
அளவிற்கு குறைக்கின்றன.
ஹைட்ரஜன்
ஆற்றல் கொண்ட டாடா ஸ்டார்பஸ் எரிபொருள் பேருந்து, பூஜ்ய கழிவு வெளியீட்டு
வாகனமாக திகழ்கிறது. புறநகர் போக்குவரத்திற்கு சிறந்த வாகனமாக திகழ்கிறது.
இந்த வாகன தயாரிப்பில் இஸ்ரோவும் கூட்டு சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மும்பை
மாநகராட்சியிடம் இருந்து, ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க
மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் டாடா மோட்டார்ஸ் கையெழுத்திட்டது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக