சனி, 31 மார்ச், 2018

காவிரி -மெரினாவில் திடீர் போராட்டம் .. இளைஞர்கள்- பெண்கள் கைது


காவிரிக்காக மெரினா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்- பெண்கள் கைதுதினத்தந்தி :காவிரிக்காக மெரினா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை போலீசார் கைது செய்தனர். #MarinaProtest #CauveryIssue #CauveryManagementBoard சென்னை< காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில்  எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம்  திடீர் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலானது. இதனால் அங்கு  இளைஞர்கள் குவிகிறார்கள் காற்றுவாங்க வந்ததுபோல் தனித்தனியாக வந்த இளைஞர்கள்  கடற்கரை ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றாக திரண்டனர். தங்களது பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த பதாகைகளை உயர்த்தி பிடித்தவாறு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள் முழக்கம்  எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்றது போல், காவிரிக்காகவும் போராடி வெற்றி பெற தமிழர்கள் ஒன்று கூட வேண்டும்.  மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்றது போல், காவிரிக்காகவும் போராடி வெற்றி பெற தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என இளைஞர்கள்  கூறினார்கள்..<;இதை தொடர்ந்து  மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றதால் அவர்களை  போலீசார் தேடிவருகின்றனர்.   அவர்கள் எந்த இடத்தில் போராட்டம் நடத்தினார்கள் என விசாரணை நடத்தினார்கள்.


 மெரினா கடற்கரையில் போரட்டம் நடத்த சென்னை காவல் துறை ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த 15  பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் விவசாயியை காப்போம்  வேடிக்கை பார்க்கும்  பொதுஜனமே வீதிக்கு வந்து போராடு என்று கோஷம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: