Special Correspondent FB Wing :வரலாறு காணாத விதமாக மத்திய அரசுக்கு எதிராக நான்கு கட்சிகள்
நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளதால் நாடாளுமன்ற மக்களவை
நிகழ்வுகள் பெரும் குழப்பத்தை அது பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேச கட்சி ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி தொகுப்பு வழங்காததை கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அக்கட்சி மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தது.
இதற்கிடையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடந்த வாரம் நோட்டீஸ் அளித்தது. மக்களவையில் தொடர் அமளி ஏற்பட்டதையடுத்து தற்போது வரை நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதனிடையே கடந்த வாரம் இறுதியில் காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாக நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் 4-வது கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திங்களன்று மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்திருக்கிறது.
மக்களவைக்கு இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் மக்களவையில் 15 நாளாக இன்றும் கூச்சம், குழப்பம் காரணமாக இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை இது பாஜக அரசின் குழப்பத்தை காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக