வியாழன், 29 மார்ச், 2018

கேரளா.. சாதியும் மதமும் வேண்டாம் ! 1,24 லட்சம் மாணவர்கள் அறிவிப்பு!


மின்னம்பலம்: கேரளாவில் நடப்புக் கல்வியாண்டில் 1.24 லட்சம் மாணவர்கள் சாதி, மதம் என எதுவும் இல்லையென்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள மாநிலக் கல்வி அமைச்சர் சி.ரவேந்திரநாத் சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 28) கூறியதாவது: “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 1,23,630 மாணவர்களுக்குச் சாதி அல்லது மதம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதுபோன்று, பதினொன்றாம் வகுப்பில் 278 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்பில் 239 மாணவர்களும் இதையே குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இந்த மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேரும்போது சாதி மதமற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு குறிப்பிடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது.”
கேரள மாநிலத்தில் இயங்கிவரும் சுமார் 9 ஆயிரம் பள்ளிகளில், சேர்க்கைப் படிவத்தில் மாணவர்கள் தங்கள் சாதி, மதம் குறிப்பிடாததின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: