தீக்கதிர் :மாஸ்கோ,
ரஷ்யாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் மேற்கு சைபீரியா நகரில் கெமரோவோ என்ற பகுதியில் நேற்று (ஞாயிறு) வணிக வளாகம் ஒன்றின் 4 வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திரையரங்கம், விளையாட்டுப் பகுதிகள், கடைகள் என 23,000 சதுர அடியில் உள்ளது அந்த வணிக வளாகம். இதில் சுமார் 16,000 சதுர அடி தீயில் கருகியது.
2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வணிக வளாகத்தில், தீ விபத்தில் இதுவரை சுமார் 37 பேர் பலியாயினர். மேலும் 69 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
4 தளங்கள் கொண்ட மால் கட்டடத்தில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக