சனி, 31 மார்ச், 2018

சிறைக்கு திரும்பினார் சசிகலா.. விடுப்பு காலம் முடியும் முன்பே பரப்பன அக்கிரகாரா ..

பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு திரும்பினார் சசிகலாமாலைமலர் :கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா, பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே இன்று சிறைக்கு திரும்பினார். பெங்களூரு:< சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு இறந்தார். அவரது உடல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இரவு 7.20 மணிக்கு கொண்டு வரப்பட்டது. நடராஜன் இறந்த தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கணவர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.br />
இதைத் தொடர்ந்து அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவரது உறவினரும் வக்கீலுமான அசோகன் சொந்த பொறுப்பில் சசிகலாவை அழைத்து வந்தார். பாதுகாப்பிற்கு போலீசார் யாரையும் அனுப்பவில்லை.


தஞ்சை வந்த அவர் கணவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து நடராஜன் வீட்டில் தங்கியிருந்த சசிகலாவை சீமான், வைகோ உள்பட முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் இன்று காலை தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ஒரத்தநாடு எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆகியோர் நடராஜன் வீட்டிற்கு வந்து சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். ஆனால் தற்போது 12 நாட்களே ஆன நிலையில் திடீரென அவர் இன்றே சிறைக்கு செல்ல முடிவு செய்தார். முன் கூட்டியே சிறைக்கு செல்வது குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன.

தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள நடராஜனுக்கு சொந்தமான வீட்டில் பரோல் நாட்களில் தங்கி இருந்த சசிகலாவிடம் நடராஜனின் சொத்துக்களை முறையாக பிரித்து தர வேண்டும் என அவரது உறவினர்கள் கேட்டதாகவும், இதற்கிடையில் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும். அதனை சசிகலாவால் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதாலும் அவர் முன்னதாக புறப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா இன்று காலை 8.50 மணிக்கு தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டார். சசிகலாவுடன் எம்.எல்.ஏ பழனியப்பன், ரெங்கசாமி, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் உள்பட பலர் சென்றனர். மாலை 4 மணியளவில் பெங்களூரு சென்றடைந்த அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.

பரோல் காலம் முடியும் முன்பாகவே அவர் சிறைக்கு திரும்பியதன் மூலம் தண்டனை காலத்தில் இருந்து அவருக்கு சலுகைகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: