தினமணி : சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரம்: பிரதமர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மார்ச் 30, 2018, 02:08 AM
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியாகி இருப்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி முறையின் தோல்விக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. மறுதேர்வு என்பது 28 லட்சம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், தேசிய கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகர்ப்பதாகும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் :புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித தேர்வும் மீண்டும் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு பாடங்களுக்கும், தேர்வுக்கு முன், வினாத்தாள் லீக் ஆனதால், மறு தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியத்தில் இருந்து, டில்லி போலீசில், மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது, சிறப்பு பிரிவு, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
முதற்கட்டமாக, இணையதளத்தில் பரவிய வினாத்தாள், சைபர் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அதில், இடம் பெற்ற, கணினி ஐ.பி., எண் வழியாக, சிலரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லியில் உள்ள சில பயிற்சி மையத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சிலர், விசாரணையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, மறுதேர்வில், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், வினாத்தாள்களை, 'பாஸ்வேர்ட்' வைத்து, டிஜிட்டல் முறையில் தேர்வு நாளில் வழங்க, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு வாரியம் முடிவு செய்து உள்ளதாக, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக