சனி, 31 மார்ச், 2018

பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் பணியில் பாஜக முழு மூச்சுடன் ... ஏனைய ஜாதிகள் பார்பனருக்கு ஏவல் நாய்களாக்கவே RSS,,

RSS பிஜேபியின் தீவிர உறுப்பினர் ஒருவரது பதிவை படித்தேன். அதையே
பகிர்கிறேன் இங்கு..
எல்லா இந்துக்களையும் காப்பாற்ற தான் RSS பிஜேபியினர் பாடுபடுகிறார்கள் என நினைத்து அந்த கட்சியில் இருந்தேன்.. கட்சிக்காக பாடுபட்டேன்.. ஆனால், அவர்கள் பிராமின மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், பிற சாதி இந்துக்களை, பிராமணர்களுக்கு ஏவல் வேலை செய்யும் ஒரு சமூக அமைப்பை நிறுவத்தான் பாடுபடுகிறார்கள், என்ற உண்மையை பட்டு தெரிந்தப்பின், அதிலிருந்து விலகிவிட்டேன்..
மாநில தலைவர் தமிழிசையை குல புத்தி என சொல்லி பார்பனரான எஸ்.வீ.சேகர் திட்டுகிறார்.. யாரும் கண்டிக்கவில்லை.. சு.சாமி, தமிழர்களை பொறுக்கிகள் என திட்டுகிறார்.. அவரை கண்டிக்காமல், MP பதவியை கொடுகிறது பிஜேபி..
அப்போதுதான் திராவிட இயக்கத்தை சேர்த்த ஒரு நண்பரை சந்தித்தேன், அவர் சொன்னார்..
இலங்கையில் ஆயிரகணக்கான தமிழ் இந்துக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே, இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே...ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ எதுவும்மே செய்யவில்லையே.. குறைந்தபட்சம் அறிக்கையோ கூட இல்லையே.. அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா???
நான் கேட்டேன் சரி, உங்க ஆட்கள் என்ன செஞ்சாங்க...
ஏங்க, நீங்க தான் இப்போ, ஈவேரா ஆட்கள், திராவிடர்கள் என்று கதைவிடுகிறார்கள்....

தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் அப்படின்னு சொன்னீங்க....ஹிந்துக்களுக்கு ஒன்று என்றால், மோடி முன்னிற்ப்பார், ஹிந்து இயக்கங்கள் போராடும் அப்படின்னு சொன்னிங்க...சரி, நீங்க சொல்றமாதிரி, தமிழர்கள் இந்துக்கள் என்றால், அப்போ ஏன் ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யல... ஒரு வாதத்துக்கு, திராவிடர்கள் நாங்க ஏன் ஹிந்துக்களுக்கு போராடவேண்டும்??, நீங்க சொல்ற மாதிரி, ஹிந்துக்களுக்கு, ஹிந்து இயக்கங்களும், மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகள் தானே போராடனும்...ஏன் மாத்தி மாத்தி பேசறிங்க...
ராஜபக்சவை யுத்தக்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது அப்படின்னு பிஜேபி ரவிசங்கர் பிரசாத் சொல்லவில்லையா...ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை" அப்படின்னு பிஜேபி சுஷ்மா சுவராஜ் சொல்லலையா... இங்கே ராஜபட்ச்வை அழைத்து விருந்து கொடுக்கவில்லையா???
அப்படின்னு என்னோட நாக்க பிடுங்குறமாதிரி கேள்வி கேட்டார்.. அவர் கேட்டதில் உள்ள நியாயத்த உணர்ந்தேன்.. அதினால், பிஜேபி RSS ஹிந்துத்துவா கட்சியிலிருந்து விலகிவிட்டேன்..
மிக மிக முக்கியமான ஒன்று, கடந்த 2014 தேர்தலின்போது பிஜேபி கட்சி வெளியிட்ட "காங்கிரஸின் மீதான குற்றபத்திரிக்கையில்", "உள்நாட்டு, பிரதேச" அழுத்தங்களுக்கு பணிந்து, தமிழர்களுக்கு எதிரான இறுதி போரில், இலங்கை ராஜபக்சே அரசுக்கு முழு ஒத்துழைப்பை, உதவியை மந்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்யவில்லை என்று குறை சொல்லியுள்ளார்கள்... அப்படி என்றால், அப்போது இலங்கைக்கு எந்த உதவியும் செய்யகூடாது, ஒத்துழைக்ககூடாது என்று "உள்நாட்டு, பிரதேச அழுத்தங்களை", அளித்தது திமுக அன்றி வேறு யார்???...அதிமுக அப்போது அமைதி காத்தது அனைவரும் அறிந்தது..மேலும் ஜெயா, இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தவர்...தமிழர்களை கொல்வது இலங்கை ராணுவம் அல்ல என்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியவர் ஜெயா...ஏனைய சிறிய கட்சிகளின் வலு தெரிந்ததே.....
திமுகவும் அப்போது இல்லையென்றால், நிலைமை இன்னும் படுமோசமாக போயிருக்கும்...தப்பித்தவறி, காங்கிரசுக்கு பதில், பாஜக அப்போது ஆட்சியில் இருந்திருந்தால், எந்த உள்நாட்டு அழுத்தங்களுக்கும் பணியாமல், காங்கிரஸ் அரசு, திமுகவின் அழுத்தங்களுக்கு பணிந்து, இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்ததைப்போல இல்லாமல், சிங்கள ராஜபக்சேவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து ஒட்டுமொத்த தமிழர்களையும் அழித்திருப்பார்கள். இதைதான் மோடியின் பாஜக, அந்த அறிக்கையில் மறைமுகமாக குறிப்பிடுகிறது...
புனைவு//Prakash

கருத்துகள் இல்லை: