சனி, 31 மார்ச், 2018

ஸ்தபதி முத்தையா ரூ.200 கோடி சொத்து குவிப்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார்..

IG Pon manickavel, Sthapathy Muthiah,,Ekambareswarar Temple,ஸ்தபதி முத்தையா, சொத்து குவிப்பு வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார், இந்து சமய அறநிலைய துறை, ஏகாம்பரேஸ்வரர் கோவில்,  உற்சவர் சிலை, சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் , ஐ.ஜி பொன் மாணிக்கவேல், பத்மஸ்ரீ ஸ்தபதி முத்தையா, 
 asset accumulation case, statue smuggling prevention police, Hindu religious charity department Somaskandar, Padmasree Sthapathy Muthiah,தினமலர் :இந்து சமய அறநிலைய துறையின், ஸ்தபதி முத்தையா, 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக் கள் வாங்கி குவித்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற, ஏகாம்பரேஸ் வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், உற்சவர் சிலைகளான, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி சிலைகள் சேதமடைந்து விட்ட தாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய பஞ்சலோக சிலை செய்ய, அறநிலைய துறை முடிவு செய்தது.இந்த சிலையை, ஸ்தபதி முத்தையா, தனக்கு வேண்டிய மற்றொரு ஸ்தபதி வாயிலாக செய்தார். அதில், முறை கேடு நடந்து இருப்பதாக, சிவகாஞ்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின், காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, போலீசுக்கு உத்தரவிட்டது.



இதையடுத்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், இந்த விவகாரம் பற்றி, ஸ்தபதி முத்தையா, ஸ்தானிகர் ராஜப்பா,செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர், பரத்குமார்,வினோத்குமார்ஆகியோரிடம் விசாரித்தார்.மேலும், சென்னை, ஐ.ஐ.டி., பேராசியர்கள் உதவியுடன், அமெரிக்கா வில் தயாரிக்கப்பட்ட, பி.எம்.ஐ., என்ற கருவி யால், சிலைகளை பரிசோதித்தார். அப்போது, குண்டு மணி அளவு கூட, சிலையில் தங்கம் இல்லை என, தெரியவந்தது. இதையடுத்து,
ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோர் மீது வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கில், அவர் முன்ஜாமின் பெற்றார்.


இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி, பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு, 2003 - 04ல், உற்சவர் சிலை செய்ததிலும், முத்தையா மற்றும் கோவில் அதிகாரியாக இருந்த, தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர், கே.கே.ராஜா ஆகியோர், மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, தமிழகம் முழுவதும், கோவில்களுக்கு சிலை செய்ததில், முத்தையாவும், அறநிலையத்துறை அதிகாரிகளும் மோசடி செய்தது தெரிந்தது.


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறிய தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த முத்தையா, கற்சிலைகள் செய்வதில் கைதேர்ந்தவர். அவர், சென்னையை அடுத்த, கேளம்பாக்கத்தில், 'ஸ்வர்ணம் சிற்பக் கலைக்கூடம்' நடத்தி வருகிறார். சென்னையில் வசித்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தொழில் அதிபரின் நட்பு கிடைக்க, முதல்வ ராக இருந்த, ஜெயலலிதாவிடம் முத்தையா அறிமுகமானார்.


தொடர்ந்து, அறநிலைய துறையின், ஆஸ்தான ஸ்தபதியாக முத்தையா நியமிக்கப்பட்டார். கோவில் சிலைகளை பாதுகாக்கும், ஸ்தானிகர் களிடம், 'பல ஆண்டுகளாக, அபிஷேகம் நடப்பதால், சிலைகள் சேதம் அடைந்து விட்டன. புதிய சிலை செய்ய வேண்டும்' என, அறிக்கை பெறுவார். பின், அதிகாரிகள் துணையுடன், புதியசிலைகள் செய்து, லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளார்.


ஜெ., முதல்வராக இருந்த போது, 2003 - 04ல், 'பழனி கோவில் சிலை, விழும் நிலையில் உள்ளது. இதனால், ஆட்சிக்கு ஆபத்து நிகழும்' எனக்கூறி, புதிய சிலை செய்துள்ளனர். அதில், 4.5 கிலோ தங்கம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஸ்தபதி முத்தையா மட்டும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை உட்பட, பல இடங்களில், 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

விருது பறிப்பு?


ஸ்தபதி முத்தையா, மத்திய அரசிடம் இருந்து, பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். அந்த விருதை, திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கடிதம் எழுத உள்ளனர்.> 'கடும் தண்டனை பெற்று தருவோம்'
இந்திய தொண்மை சட்டம், 100 ஆண்டுகள் பழமையான சிலைகளை, பேணி, பராமரித்து பாதுகாக்க வேண்டும் என, சொல்கிறதே தவிர, அதை அகற்றி விட்டு, புதிய சிலையை வைக்க வேண்டும் என, எந்த இடத்திலும் சொல்ல வில்லை. முத்தையாவும், அவரது கூட்டாளி களும், நுாதன முறையில்,புதிய சிலைகள் செய்து கொள்ளை அடித்து உள்ளனர். சட்டப்படி, அவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம். பொன் மாணிக்கவேல் ஐ.ஜி.,


- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: