புதன், 17 டிசம்பர், 2014

She TAXI பெண்கள் பாதுகாப்பிற்காக 'ஷீ டாக்சி'


திருவனந்தபுரம்: 'பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், கேரளாவில் செயல்படும், 'ஷீ டாக்சி'யை நாடு முழுவதும் செயல்படுத்த தயார்' என, 'ஜென்டர் பார்க்' அமைப்பின் தலைவர் சுனிஷ் தெரிவித்துள்ளார் டில்லியில், உபெர் கால் டாக்சியில் பயணித்த பெண்ணை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைத்து கால் டாக்சி டிரைவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களின் விவரங்களை சேகரிக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது. பெண்களில் சில சொர்ணாக்கா இருப்பாங்களே...... ஒவ்வொரு கேடகரிக்கும் ஒரு டாக்சி சர்விஸ் ஆரம்பிக்க வேண்டியது தான்..முதலில் கண்காணிப்பை அதிக படுத்துங்க.நிறுவனங்களுக்கு கிடிக்கி பிடி போடுங்க..மீறுபவர்களை உள்ள தள்ளுங்க..அரசு அலுவலர்கள் கையூட்டு வாங்குவதை நிறுத்துங்க.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக, கேரளாவில், கடந்த ஆண்டு நவம்பரில், 'ஷீ டாக்சி' அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்காகவே இயக்கப்படும் இந்த ஷீ டாக்சிக்களில் பெண்கள் மட்டுமே டிரைவர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வகை வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர சேவை அளிக்கப்படுவதால், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு உகந்ததாக கருதப் படுகிறது. கேரளாவில், இந்த கால் டாக்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேரள மாநில சமூக நீதித் துறையின் கீழ் இயங்கும், ஷீ டாக்சிக்களை, நாடு முழுவதும் விரிவுபடுத்த, அதை நிர்வகிக்கும் 'ஜென்டர் பார்க்' அமைப்பு திட்டமிட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: