சனி, 20 டிசம்பர், 2014

அரவிந்தர் ஆஸ்ரமத்தை இழுத்து மூட வலியுறுத்தி முழு அளவு கடையடைப்பு

Agitation against Aurobindo Ashram அரவிந்தர் ஆசிரம பெண்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்த ஆசிரமத்தை இழுத்து மூட வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் விடுத்த முழு அடைப்பு அழைப்பை ஏற்று புதுவையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் புதுவையில் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
ஆசிரமத்தினை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிர்வகிக்க வேண்டுமென்றும், அதுவரை ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும்,சகோதரிகளின் தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: