விமானக் கடத்தலில் ஈடுபடும் நபருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
"விமானக் கடத்தல் தடுப்பு மசோதா-2014' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதாவை, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அறிமுகம் செய்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மசோதா வாபஸ் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 1999ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியது, 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் விமானங்களைக் கடத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடினமான ஷரத்துகளுடன் இந்தப் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், விமானக் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிப்பது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட விமானத்தை தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், அதைச் சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிப்பது போன்ற கடுமையான ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், முக்கிய இடங்களுக்கு தொலைபேசி மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுப்பது, வதந்திகளைப் பரப்புவது போன்றவற்றையும் கடும் குற்றமாகக் கருதி, அத்தகைய மிரட்டல்களை விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை காவல் துறையினருக்கு அளிக்கும் ஷரத்தும் மசோதாவில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு, 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மசோதாவில் விமானக் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கக்கூடிய ஷரத்துகள் இல்லாமல் இருந்தது. எனவே, அந்த மசோதாவை வாபஸ் பெறுவதென்று மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டு, மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதரஸாக்களில் பயங்கரவாதப் பயிற்சியா?: இதனிடையே, மாநிலங்களவையில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்த பதிலில், "மதரஸாக்களில் பயங்கரவாதப் பயிற்சி அளிக்கப்படுவதாக அரசுக்கு தகவல் ஏதும் வரவில்லை. மேற்குவங்க மாநிலம், பர்த்வான் சம்பவம் தொடர்பான விசாரணையில் அங்குள்ள 3 மதரஸாக்கள் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களால் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அங்குதான் மத அடிப்படையிலான பயங்கரவாத, மதபோதனைகள் அளிக்கப்பட்டன' எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:
ராஜஸ்தான் மாநிலத்தையொட்டிய எல்லைப் பகுதிகளில், மதரஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, பார்மர் மாவட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம், அந்த மதரஸாக்களில் பயங்கரவாதப் பயிற்சி அளிக்கப்படுவதாக எந்தத் தகவலும் இல்லை. எனினும், எல்லையோரப் பகுதிகளில் சந்தேகம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை கண்காணிக்கும்படி உளவு அமைப்புகளும், பாதுகாப்பு அமைப்புகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சௌத்ரி அளித்துள்ள மற்றொரு பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
இராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே இந்தியர்கள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளது என அவர்dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக