கமல்
சீக்கிரம் உத்தமவில்லன் படத்தை போட்டுக்காட்டு பார்த்துவிட்டுப் போகிறேன்’
என்று இரட்டை அர்த்தங்கள் எதுவுமில்லாமல் ஒரே அர்த்தத்தில் சொன்னார் திரு
கே.பி. அவர் உத்தமவில்லன் படத்தை பார்க்கத் துடித்த வேகத்தை என்னால்
புரிந்துகொள்ளமுடிந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உத்தம வில்லனின் முக்கிய
இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது கே.பி க்ரிட்டிகல் என்ற செய்தி
வந்தடைந்தது. அவர் உதவியாளர் மோகனிடம் விசாரிக்கத்தான் கூப்பிட்டேன்ஆமா
சார் க்ரிடிகல்னு தான் சொல்றாங்க. நினைவு இருக்கு. ஆனா மூணு நாளா
யார்கிட்டயும் பேசல. நீங்க வேணும்னா பேசிபாக்குறீங்களா’ என்று
முன்னெச்சரிக்கை எதுவுமின்றி கைபேசியை கே.பி-யிடமே கொடுத்துவிட்டார்
திரு.மோகன். ’ஹலோ கமல்’ என்று குரல் மெல்லிதாக வந்தது. கிட்டத்தட்ட 43
வருடங்களாக கேட்டுப் பழகிய குரல். எத்தனை பழுதுபட்டாலும் அடையாளம்
தெரிந்தது எனக்கு.
'சார் படம் வேலைகள் நடந்துகிட்டு இருக்கு. முடிச்சிட்டு வந்துட்றேன், பாத்துக்கங்க’ என்றேன். அதன்பிறகு நீண்ட நேரம், கிட்டத்தட்ட ஒன்றறை நிமிடம். அவர் இருந்த நிலையில் அது நீண்டநேரம் தானே. அவர் பேசியது எதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால் புரிந்ததுபோல் அவர் பேச்சுக்கிடையில் சரியான தருணம் பார்த்து இடைவெளியில் ’சரி, ஆகட்டும் சார்’ என்று தோராயமாக சொல்லி வைத்தேன். சற்று நேரத்தில் தவறான இடங்களில் ஆமோதிக்கிறேன் என இருவருக்குமே விளங்கியபோது மெலிதாக சிரித்தார். எனினும் தொடர்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு கைபேசியை உதவியாளரிடம் கொடுத்தார். ’சார், ஆச்சர்யமா இருக்கு சார். பேசிட்டாரு சார். நாளைக்கும் ஃபோன் போடுங்க இன்னும் தெளிவா பேசினாலும் பேசுவார்’ என்றார் குரல் தழுதழுத்த மோகன். சென்னைக்கு புறப்பட ஆயத்தமானார் கௌதமி. என் சகோதரர் சாருஹாசனுடன் பேசினேன்.
நான் வந்து சாதிக்கக்கூடியது எதுவுமில்லை. எனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் இத்தருணத்தில் உதவாது. சரியாகச் சொன்னால், படிக்காமல் வாங்கிய எந்த பட்டமும் எத்தருணத்திலும் உதவாது. வேலையை முடிக்காமல் வருவதை நான் மட்டுமல்ல, நான் தொழில் கற்ற, உதவிய திரு கே.பி-யும் விரும்பமாட்டார். என் ஆர்வமெல்லாம் முடிந்தால் படத்தை அவருக்கு போட்டுக் காட்டவேண்டும். எனக்கு நான் விரும்பு கலையில் நல்ல இடத்தைத் தேடித்தந்த ஆசானுக்கு என் வணக்கங்கள் என்றும் போதும். முடிந்தால் மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா. உங்கள் கமல். nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக