Jeyanthi Natarajan running to BJP ?காங்கிரஸ் கட்சியில் 'தலைகாட்டாமல்' ஒதுங்கியிருக்கும் முன்னாள்
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னையில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய
ஜனதாவில் இணையக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மன்மோகன் சிங் அரசில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி
நடராஜன் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனால்
அமைச்சர் பதவியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர்
அவர் தலைகாட்டுவதே இல்லை.
லோக்சபா தேர்தலிலும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். ஜி.கே.வாசன்
தனிக்கட்சி தொடங்கிய போதும் கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனிடையே பாரதிய
ஜனதா கட்சியில் சேருவதற்காக டெல்லியில் முகாமிட்டும் இருந்தார். ஆனால்
பாஜகவிலும் ஜெயந்தி நடராஜனை சேர்க்க எதிர்ப்பு இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நாளை பாஜக தலைவர் அமித்ஷா வரும்போது அவரது
முன்னிலையில் அக்கட்சியில் ஜெயந்தி நடராஜன் இணையத் திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா முன்னிலையில் இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பாஜகவில் இணைய
இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரொம்ப நல்ல மூவ்! குப்பைகள் இருக்கவேண்டிய குடோன் அதுதாய்ன் tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக