வெள்ளி, 19 டிசம்பர், 2014

வெற்றி பெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் விபரம்

திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.   மாவட்ட அவைத்தலைவர், செயலாளர் , 3 துணை செயலாளர்கள்( 1 பொது தொகுதி, 1 ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பு, 1 மகளிர்) பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு  அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடைபெற்றது.   தொடர்ந்து மாலை 3 மணிக்கு  நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு, திருச்சி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்தும், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு ராயபுரம் அறிவகத்திலும் தேர்தல் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் துரை சந்திரசேகர் 34 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.  இவர், டி.ஆர்.பாலு ஆதரவாளர்.   இவரை எதிர்த்து போட்டியிட்டு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தம்பி ராஜ்குமார் 32வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.  

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கல்யாணசுந்தரம் வெற்றி பெற்றார்.   இவர் பழனிமாணிக்கம் ஆதரவாளர். கோ.சி.மணி

திருச்சி வடக்கு மாவட்டத்தில் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி பெற்றார்.  இவர் கே.என். நேருவின் ஆதரவாளர். முன்னாள் அமைச்சர் செல்வராஜுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும்தான் கிடைத்தது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வெற்றி பெற்றார்.  இவரை  எதிர்த்து  போட்டியிட்டவர் 30 வயது இளைஞர் செந்தில்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் வெற்றி பெற்றுள்ளார்.
கடலூர் மேற்கு மாவட்டத்தில் கணேசன் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன் தோல்வியுற்றார்.  கணேசன் - எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம் ஆதரவாளர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேர்தல் பிரச்சனையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. nakkheeran .in

கருத்துகள் இல்லை: