சனி, 20 டிசம்பர், 2014

ராபர்ட் வத்ரா ஊழல் முக்கிய ஆவணங்களை காணல்லியாம்?

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கும், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,க்கும் இடையே, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நில பேரம் தொடர்பான, முக்கிய ஆவணங்கள், திடீரென காணாமல் போயுள்ளன. இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அரியானாவில், இப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசின் ஆட்சியின் போது, சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்.அவரின் மோசடிகளை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆளும் காங்., அரசின் தொந்தரவுகளுக்கு ஆளானார்.   கெம்கா இன்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் இந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.. முதலில் ஆவணங்களைக் காணோம் என்று அரசு குற்றப்பதிவு செய்யட்டும்.. பின்னால் பாருங்கள்.. என்னாமே தானாக வந்து கையில் விழும்.. என்கிறார்.. இவரிடம் காணாமல்போன ஆவணங்களின் நகல் இருக்கிறது... எனவே யாராவது விளையாட நினைத்தாலும் நடக்காது.. ஆனால் ராபர்ட் வத்ரா ஒரு மோசமான பேர்வழி... சமாளிக்க முடியாது போனால் சமாதி கட்டவும் தயங்காத மனம் ..... கெம்கா ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும்... இங்கே ஒரு சகாயம் கல்லுளிமங்கன்களிடம் சிக்கியிருக்கிறார்.. அங்கே ஒரு கெம்கா பகல் கொள்ளையனிடம் சிக்கியிருக்கிறார்.. என்னாகுமோ......

இந்நிலையில், ராபர்ட் வாத்ரா - டி.எல்.எப்., இடையேயான நில பேரங்கள் தொடர்பான, இரண்டு பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், திடீரென காணாமல் போயுள்ளதாக, தகவல்கள் பரவி உள்ளன; இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்த பேரங்களின் நகல்கள், அதிகாரி அசோக் கெம்காவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அரியானா அரசு காணாமல் போன ஆவணம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. முந்தைய காங்., ஆட்சி காலத்தில், முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரி கள், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர் என, தகவல் வெளியாகி உள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: