பொதுவாழ்க்கையில் நுழைந்தவர்கள் அனைவருமே விமர்சனத்திற்கு
உரியவர்கள்தான். 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து படம்
பார்த்த சினிமா ரசிகர்கள் ரஜினியின் லிங்காவை விமர்சித்து கொண்டுதான்
இருக்கின்றனர்.
ஊருக்காக தனது சொத்துக்களை எழுதி வைப்பதை முத்து காலத்தில் இருந்தே
செய்து கொண்டிருக்கும் ரஜினி இன்னமும் ஒருவாய் சாப்பாடு கூட ரசிகர்களுக்காக
போட்டதில்லை என்பதே உண்மை அதுவே விமர்சனத்திற்கு ஆளாகிறது.
படத்திற்கு படம் சொத்தை எழுதி வைத்துவிடுவதாக காண்பித்தாலும்,
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது என்னவோ ரஜினிதான் என்கின்றனர் சினிமா
ரசிகர்கள்.
அதேபோல ரஜினியைத் தவிர அவரைச்சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரை
அரசியலுக்கு அழைக்கின்றனர். ஆனால் அவரோ தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை
என்கிற ரீதியிலேயே பேசுவதால் ரஜினி ரசிகர்களே சோர்வடைகின்றனர் என்கின்றனர்
சினிமா பார்வையாளர்கள்.
இதைவிட இந்த படத்தில் எந்தெந்த காட்சிகள் காப்பியடிக்கப்பட்டன. சிவந்த
மண் படத்தில் இருந்துதான் லிங்காவின் கிளைமாக்ஸ் காப்பியடிக்கப்பட்டது
என்றும் உலாவருகின்றன.
லிங்கா வெளியான மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக
தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். அதே சமயம் லிங்காவின் தெலுங்கு உரிமை
சுமாராக 30 கோடிகளுக்கு விலைபோனது. இது எந்திரனைவிட அதிகம்.
லிங்கா வெளியான முதல்நாள் ஆந்திரா முழுவதும் சேர்த்து 4 கோடியையே படம்
வசூலித்துள்ளது. படம் சரியில்லை என்ற விமர்சனம் காரணமாக இரண்டாவது
நாளிலிருந்தே கூட்டம் குறையத் தொடங்கியது. வார நாட்களில் வசூல் இன்னும்
மோசமடையும் என்பதால் அசலையாவது படம் எடுக்குமா என்ற நிலைக்கு படத்தை
வாங்கியவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மற்ற தமிழ் நடிகர்களின் படங்களைவிட மிக அதிகம்தான் லிங்கா வசூலித்துள்ளது.
ஆனாலும் அதற்கு தரப்பட்டது மிகமிக அதிக விலை என்பதால் நஷ்டம் ஏற்படும்
சூழல் உருவாகியிருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் லிங்கா வெளியானது.
நள்ளிரவு 1 மணிமுதல் திரையிடப்பட்டது படம். 8 காட்சிகள் கூட
திரையிடப்பட்டதாம். டிக்கெட் 300 ரூபாய் 400 ரூபாய்க்கு கூட விற்பனை
செய்யப்பட்டதாம். இதன் காரணமாகவே மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூல்
என்கின்றனர் உண்மை அறிந்தவர்கள். ஆனால் அரசுக்கு இந்த தொகை சரியாக கணக்கு
காட்டப்படுமா என்றும் கேட்கின்றனர்.
tamil.filmibeat.com
tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக