தஞ்சை
மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா. இவர் நேற்றுகாலை சென்னையை
சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியுடன் தஞ்சை மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் இருவரும் போலீஸ் சூப்பிரண்டு
தர்மராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சைக்கு
வந்தது குறித்து டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, நீதிமன்ற
உத்தரவுபடி எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பு
அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் உயிரை பற்றி கவலைப்படவில்லை.
ஆனால் இந்த பெண்ணுக்கு (பாத்திமா) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று
கேட்டால் தனிப்பட்ட முறையில் எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது
என்று கூறுகின்றனர்.
போலீசாரின் அணுகு முறை சரியில்லை. மணல் கொள்ளை, அனுமதியின்றி விளம்பரபலகை வைப்பது உள்பட பல்வேறு முறை கேடுகளை எதிர்த்து பாத்திமா நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாத்திமாவை கொலை செய்ய 3 முறை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதனால் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி பாத்திமாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம் என்றார்.
கும்பகோணத்தை சேர்ந்த பாத்திமா கூறும்போது, நான் டிராபிக் ராமசாமியின் மாணவி. அவர் சமூக சேவை செய்வதைபோல் நானும் செய்து வருகிறேன். மணல் கொள்ளை முறைகேடு உள்பட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரித்தபோது போலீஸ்காரர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் தான் அவர்கள் என் மீது கோபமாக இருக்கிறார்கள். நீ டிராபிக் ராமசாமி போல் செயல்பட்டால் உனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகளே என்னை மிரட்டினார்கள்.
நான் முறைகேடாக செயல் படும் மணல் குவாரிக்கு சென்றால் ரவுடிகள் எனது வாகனத்தை அடித்து நொறுக்குகின்றனர். என்னை 3 முறை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவற்றில் இருந்து நான் உயிர் தப்பி இருக்கிறேன். போலீசாரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வீதிக்கு ஒரு டிராபிக் ராமசாமி வந்தால் தான் இந்த முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஜீப்பில் ஏறி புறப்பட்டு சென்றனர maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக