ஆஸ்திரேலியாவின் சிட்னி
நகரில் உள்ள உணவகத்தில் அதிரடியாக நுழைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு
நடத்தி, பிணையக்கைதியாக இருந்தவர்களை மீட்டனர்.ஆஸ்திரேலியாவின்
சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தின் ஒன்றில் உள்ள உணவகத்தில் நுழைந்த மர்ம
மனிதன் ஒருவன் அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தான்.
பிணையக்கைதிகளில் ஒருவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திர
மாநிலம், குண்டூரைச் சேர்ந்த விஸ்வகாந்த் ரெட்டி உள்பட இரண்டு இந்தியர்கள்
சிக்கியிருந்தனர்.ஆஸ்திரேலியப்
பிரதமர் டோனி அபாட், தன்னிடம் தொலைபேசி மூலம் பேச வேண்டும் என்று அந்த
மர்ம மனிதன் நிபந்தனை விதித்தான். போலீசார் அவனிடம் பேச்சுவார்த்தை
நடத்தியும் பயன் அளிக்காததால், உணவகத்திற்குள் அதிரடியாக நுழைந்து
துப்பாக்கிச் சூடு நடத்தினர்ஏற்கனவே
5 பேர் அவனிடம் இருந்து தப்பி வந்த நிலையில், காவல்துறையினரின் இந்த
அதிரடி நடவடிக்கையால் 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் மீட்கப்பட்டனர். இந்த
மோதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுமார் 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக காவல்துறையினர் அறிவித்தனர்.;காவல்துறை துப்பாக்கிச் சூட்டில், அந்த மர்ம மனிதன் குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக