ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கேரளா திரைப்பட விழாவில் Kiss of Love ஒருவருக்கொருவர் முத்தம்.......


திருவனந்தபுரம்: கேரளாவில் ‘கலாசார காவலர்கள்Õ என்ற பெயரில் சிலர் பொது இடங்களில் நடத்தும் வன்முறை சம்பவங்களை கண்டிப்பதாகக் கூறி ‘கிஸ் ஆப் லவ்Õ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் முத்தம் கொடுத்தும், கட்டிப்பிடித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களுக்கு இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும்பாலும் இந்த முத்தப் போராட்டங்கள் வன்முறையில் தான் முடிகிறது. கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் நடந்த முத்தப் போராட்டங்களில் போலீ சார் தடியடி நடத்தினர். முத்தம் கொடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. ஆனாலும் தங்களது முத்தப் போராட்டம் கேரளாவில் பல்வேறு இடங்களில் தொடரும் என இந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் ஆலப்புழா மற்றும் வயநாட்டில் தாங்கள் போராட்டம் நடத்தப் போவதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் திடீரென முத்தப் போராட்டம் நடந்தது. திருவனந்தபுரத்தில் 19வது சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் (12ம் தேதி) தொடங்கியது.
இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சினிமா கலைஞர்கள் குவிந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி, நிலா, ஸ்ரீ, நியூ உட்பட 12 தியேட்டர்களில் ஈரான், பெல்ஜியம், சீனா, துருக்கி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட படங்கள்  திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இந்நிலையில் நேற்று பகல் 1 மணியளவில் சில இளம்பெண்கள் உட்பட சுமார் 20 பேர் கைரளி தியேட்டர் முன் முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் தியேட்டர்களுக்கு வந்தவர்களிடம் பிட் நோட்டீஸ்களை விநியோகித்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் விரைந்து சென்றனர்.

நேரம் செல்லச்செல்ல தியேட்டர் முன் கூட்டம் அதிகரித்தது. இந்த சமயத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளம்பெண்களும், வாலிபர்களும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த ஏராளமானோர் முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து கூச்சலிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு இரு பிரிவினரையும் அமைதிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தை எதிர்த்தவர்கள் அமைதியானார்கள். அதற்குப் பிறகும் சிறிது நேரம் முத்தப் போராட்டம் தொடர்ந்து. பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: