செவ்வாய், 16 டிசம்பர், 2014

கலைஞர் டோஸ் : தி மு க ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம்!

கழகம் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற;தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும்!: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் கடிதம் :நமது கழகத்தின் 14வது பொதுத் தேர்தல், ஜனநாயக முறைப்படியும், அதே நேரத்தில் தொண்டாற்ற போவதற்கான போட்டி உணர்வோடும்; கிளைக் கழகச் செயலாளர்கள் தொடங்கி மாவட்டக் கழகச் செயலாளர்கள்வரை படிப்படியாகநடந்து முடிந்துள்ளது. அடுத்து, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.நியமன முறையில் இன்னார் தான் இந்த மாவட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர் என்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகின்ற கட்சி நம்முடைய கட்சி அல்ல. கழகம் தோன்றியது முதல் இதுவரை 13 பொதுத் தேர்தல்களை நடத்தி முடித்து, அதாவது 2008ஆம் ஆண்டுடிசம்பர் 27ஆம் தேதியன்று 13வது பொதுத் தேர்தலை நடத்தி முடித்து தற்போது 14வது பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது ஆளுங்கட்சி அல்ல. ஆனாலும் எந்த அளவுக்குக் கழகப் பணியாற்ற கட்சியினருக்குள் போட்டி எழுந்துள்ளது தெரியுமா?
கழகத்தின் இந்த 14வது கழக அமைப்புத் தேர்தலில் கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 36 ஆயிரத்து 744. நான் ஏற்கனவே ஒரு முறை எழுதியவாறு, 13வது அமைப்புத் தேர்தலுக்கும், தற்போது நடைபெறும் 14வது அமைப்புத் தேர்தலுக்கும் இடையே கழக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக 13வது கழக அமைப்புத் தேர்தலில் மதுரை, கோவை மாநகர் உட்பட கழக மாவட்டங்களாக 36 இருந்தன. இந்த மாவட்டங்களை தற்போது நிர்வாக வசதிக்காக 65 கழக
மாவட்டங்களாக பிரித்திருக்கிறோம். அது போல ஏற்கனவே 392 ஒன்றியக் கழகங்கள் இருந்ததற்கு மாறாக தற்போது 578 ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் நகரக் கழகங்கள் 129 - பகுதிக் கழகங்கள் 97 - பேரூராட்சி கழகங்கள் 538 - இவை தவிர வார்டு கிளை என்று எடுத்துக்கொண்டால், கழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 247 வார்டுகள் உள்ளன. அதில்மாநகராட்சி வார்டுகள் 820 - பேரூராட்சி வார்டுகள் 8,397 - நகர வார்டுகள் 3,735 - 12,514 ஊராட்சிகளில் உள்ள 99,295 ஊராட்சி வார்டுகள் உள்ளன.

இவற்றில் ஊராட்சி வார்டுகள், நகர வார்டுகள், பேரூராட்சி வார்டுகள், ஒன்றியங்கள், நகரங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் முடிந்துவிட்டன. மாநகராட்சி வார்டுகளில் தேர்தல்கள் நடந்து கொண்டு வருகின்றன.

 அகில இந்தியாவிலும் எடுத்துக் கொண்டால், எந்தவொரு கட்சியிலும் உறுப்பினர் சீட்டுகள் முறையாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அந்த அடிப்படையிலே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தேர்தல் நடத்துகின்ற கட்சி தி.மு. கழகத்தைத் தவிர வேறு ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு ஜனநாயக ரீதியாகவும், அறிவியல் முறைப்படியும் நடைபெறும் தேர்தல்களில் ஒன்றிரண்டு இடங்களில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

இந்த 14வது அமைப்புத் தேர்தலில் ஒரு சில இடங்களில் அப்படிப்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் நடைபெற்றதாக என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளன. அந்த முறையீடுகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மீதோ, தலைமைக் கழக ஆணையாளர் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கூடத் தரப்பட்டிருக்கலாம். அல்லது நடைபெற்ற தேர்தலில் தங்கள் அணி தோற்று
விட்டது என்ற காரணத்தால், அப்படிப்பட்ட புகார்களைக் கொடுத்திருக்கலாம்.

ஒரு ஜனநாயக இயக்கத்தில் போட்டிகள் இருப்பது இயற்கை தான். அதுவும்  திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற மாபெரும் கட்சிகளில் ஒரே பொறுப்புக்குப் பலர் வர விரும்புவதும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். ஆனால் அந்தப்போட்டி நியாயமாகவும், ஆரோக்கியமான முறையிலும், ஜனநாயக நெறிப்படியும் நடைபெற வேண்டுமே தவிர, தவறான முறையில், பொறுப்பற்ற தன்மையில் புகைச்சலை உருவாக்கும் வகையிலே அமைந்து விடக் கூடாது.

 “திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனை பேரும், யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது
என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும். இதிலே பகைவர்கள் உள்ளே புக நினைத்தால், அவர்கள் எங்கள் நெருக்கத்தின் இடையில் சிக்கிக் கூழாகிப் போவார்கள். 

திராவிட முன்னேற்றக் கழகம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து பணி யாற்ற வேண்டுமென்பதற்கு ஏற்பட்டிருக்கிற ஓர் அமைப்பே தவிர, வேறு ஏற்றத்தாழ்வுகள், மனமாச்சர்யங்கள் எங்களுக்குள் இருக்கிறதென்று மாற்றார்கள் கருதினால், நாங்கள் வளர்ந்த வரலாற்றை அவர்கள் தெரிந்து கொண்டவர்கள் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒரே இலையில் சாப்பிடக்கூடியவர்கள்; நாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறக்காததற்குக் காரணம், ஒரு தாயின் வயிறு இத்தனை பிள்ளைகளையும் தாங்காது என்பது தான்!” -என்று 26-9-1960 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உருக்கமிகு உரையினை நான் ஏற்கனவே
ஞாபகப்படுத்தியிருக்கிறேன்.

தேர்தலிலே போட்டியிடுகின்ற, வெற்றி பெறுகின்ற, வெற்றி வாய்ப்பை இழக்கின்ற, அவர்களுக்கு வாக்களிக்கின்ற கழகத்தோழர்கள் ஒவ்வொருவரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த வார்த்தைகளை மறந்து விடக்கூடாது.

மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், போட்டியிடுகின்றவர்கள் ஒன்றை நினைவிலே கொள்ள வேண்டும். அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மிகப் பெரிய தோல்வியை அடைந்த போது, அதற்குக்காரணமாக கூறப்பட்ட பலவற்றில் ஒன்று, மாவட்டக் கழகச் செயலாளர்களாக இருந்த ஒரு சிலர், அதிலும் அமைச்சர் பதவியிலே இருந்தவர்கள் நடந்துகொண்ட முறை தான் என்று ஏடுகள் சில எழுதின. ஏன், “குறுநில மன்னர்கள்”போல் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நடந்து கொண்டது தான் காரணம் என்றே எழுதி யிருந்தன. 

வேறு கட்சிகளில் என்றால், யார் யார் மீது குறை கூறப்பட்டதோ அவர்களையெல்லாம் எந்தவிதமான விசாரணையுமின்றி உடனடியாக நீக்கி அறிவிப்பு செய்து விடலாம். ஆனால் தி.மு.கழகம், கடமை,கண்ணியம், கட்டுப்பாடு போற்றக் கூடியதல்லவா? சர்வாதிகார முறையை
அகற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றி வருவதல்லவா? எனவே இந்தத் தேர்தலை எப்படி நடத்துவது என்று நானும், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும், பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும் பல முறை பேசியிருக்கிறோம்.

எதிர்காலத்தில் தி.மு. கழகத்தை எப்படி நடத்திச் செல்வது என்று விவாதித்திருக்கிறோம். கழகத்தை எப்படிக் கட்டிக் காப்பது, எப்படி வளர்ப்பது,என்ன செய்தால் கழகத்திற்கு வலிமை சேர்க்கும் என்ற நினைவு தான் இரவும் பகலும் என் சிந்தனையில்! கழகத்தின் செயல்பாட்டினை மேலும் செம்மையாக்க வேண்டு மானால், கழகம் ஏதோ சிலரிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு தவறான எண்ணம் ஒரு சிலரிடையே இருப்பதைப் போக்க வேண்டும்!

கழகக் கட்டிடத்தை வலுவோடு தாங்கும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்ற தூண்களைக் கறையான் அரித்து விடக்கூடாது என்று தான் எண்ணினோம். அதற்காக என்ன செய்யலாம் என்று பல முறை கலந்து பேசினோம். தற்போதுள்ள 65 மாவட்டங்களில் புதிய மாவட்டங்கள் 31. அங்கே புதியவர்கள் தான் மாவட்டக்கழகச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள். மற்ற 34 மாவட்டங்களில் என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்காகவே மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு, வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள், பல முறை மாவட்டக்கழகச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள் என்று பார்த்து, அப்படிப்பட்ட 18பேரை நேரில் வரவழைத்து நானும், பேராசிரியரும், தம்பி ஸ்டாலினும் நேரடியாகப்
பேசினோம். 

ஜனநாயக முறைப்படி நடைபெறும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்தலில், யாரையும் நிற்கக் கூடாது என்று தடுத்திடலாகாது என்ற வகையில்,மாவட்டக் கழகச் செயலாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் ஒரு உறுதிமொழிப் பத்திரம் தர வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்தஉறுதிமொழிப் பத்திரத்தில், “மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு இந்தத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்கிறவர்கள், கட்டுப்பாட்டை ஏற்றுச் செயல்பட வேண்டு மென்பதற்காக அவர்களிடத்தில் ஒரு உறுதி மொழிப் பத்திரம் பெறவேண்டுமென்று தீர்மானித்தப்படி, இந்த உறுதி மொழி அந்த வேட்பாளர்களிடத்தில் வாங்கப்படுகிறது. இதில் கையொப்பமிட்டு தலைவரிடம் ஒப்படைப்பவர்கள் அடுத்து வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ தாங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டுமென்றோ,தலைவர் நியமிக்கின்ற பதவிகளில் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தாருக்கோ இடம் அளிக்க வேண்டுமென்றோ வேண்டுகோள் வைக்க மாட்டோம் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. 

 இந்த உறுதிமொழிப் பத்திரத்திலே கையொப்பமிட்டு கொடுத்து விட்டுத்தான் இந்த 18 பேரும் மாவட்டக் கழகத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து சில மாவட்டங்களில் வேறு சிலர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒரு சிலரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. ஆனால் கழகத்தைப் பொறுத்தவரையில் முன்பு அமைச்சர்களாகஇருந்தவர்களையோ, மாவட்டக் கழகச் செயலாளர்களையோ மீண்டும் நிறுத்த வேண்டுமென்று எண்ணாமல், அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவார்களானால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ வரவும் எண்ணக் கூடாது என்பதற்காகத் தான் அவர்களிடமிருந்து உறுதிமொழிப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

 மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்தல் 19-12-2014 அன்று தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி வடக்கு, கடலூர் மேற்கு, கன்னியாகுமரிகிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கான தேர்தல், காலை 10 மணியளவில்அண்ணா அறிவாலயத்திலும், அன்றைக்கே மாலை 3 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களுக்கான தேர்தலும், அன்றைக்கே மாலை 3 மணி அளவில் ராயபுரம் அறிவகத்தில் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், 21-12-2014அன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில், திருவாரூர், கரூர்,தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கும், அன்றைக்கு மாலை 3 மணியளவில்,அண்ணா அறிவாலயத்திலேயே நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், 22-12-2014 அன்று காலை 10 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில், திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், அன்றைக்கே மாலை 3 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில், இராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி (மத்திய) ஆகிய மாவட்டங்களுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

 இந்தத் தேர்தல்களில் எந்தவிதமான ஜனநாயக விரோதச் செயல்களுக்கும் இடம் தராமல், வரும் ஐந்தாண்டு காலத்திற்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் கழகப் பணியினை யார் தலைமையிலே ஆற்றுவது என்பதற்காகத் தான் நடைபெறுகிறது என்பதை மனதிலே கொண்டுநடக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 

வெற்றி பெறுகிறவர்கள், தாங்கள் ஏதோ யாரையோ தோற்கடித்து விட்டோம் என்ற எண்ணம் கொள்ளாமல், வெற்றி வாய்ப்பினை இழந்தவர்களும், கழக உடன்பிறப்பு தான், நாளை அவரோடு இணைந்து தான் நம்முடைய பொது எதிரியை சட்டமன்றத் தேர்தல்களில்,நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்திக்க வேண்டுமென்ற மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டு எங்களைச் சந்திக்க வரவேண்டுமே தவிர, “என்னை எதிர்த்தா போட்டியிட்டாய்? உன்னை இருக்குமிடம் தெரியாமல்
ஆக்கி விடுகிறேன் பார்!” என்றெல்லாம் மமதை கொள்ளாமல், அண்ணா கற்பித்துள்ள அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில் நடந்து கொள்ள வேண்டும். 

வெற்றி வாய்ப்பை இழந்த உடன்பிறப்புகளும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களோடு இணைந்து பணியாற்றி, உழைப்பினால் கழகத் தோழர்களின் உள்ளங்களில் குடியேறி, அடுத்த தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டுமே தவிர, “என்னை எதிர்த்து வெற்றி பெற்று விட்டாயா,பார்க்கிறேன் ஒரு கை” என்று எண்ணுவது நல்லதல்ல.

 கல்லூரிகளில் கயிறு இழுக்கும் போட்டிகளில் மாணவர்கள் இரண்டுமூன்று அணிகளாகப் பிரிந்து ஈடுபட்டாலுங்கூட, அதிலே ஏற்படுகின்ற வெற்றி -தோல்விகளால் உள்ளம் பாதிக்கப்படுவதில்லை. வெறும் விளையாட்டு உணர்வே தான் வெளிப்படும் என்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? அதைப்போலவே, நாமனைவரும் சேர்ந்து, நமது கழகத்தின் ஜனநாயக அமைப்புத்தேர்தலுக்காக பகுதி பகுதியாகப் பிரிந்து - அப்படிப் பிரிவதிலே மனமாச்சர்யமோ, பகை உணர்வோ இல்லாமல் வெறும் போட்டி உணர்வும் - எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை எப்படிக்காப்பாற்றுவது,

 எப்படி வளர்ப்பது என்ற அந்த ஒரே நோக்கத்தோடு ஈடுபடுகின்றஅந்த உணர்வு தான் நம்முடைய இயக்கத்தின் உள்கட்சித் தேர்தல்களிலும் வெளிப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய தணியாத ஆசையாகும்.

 அண்ணா இருந்த போது அவருடைய நோக்கத்தை எப்படி நாம் அண்ணா இருந்த போது அவருடைய நோக்கத்தை எப்படி நாம் நிறைவேற்றியிருக்கிறோமோ, அதைப் போல இன்றும் அண்ணா இருக்கிறார்;உயிரோடு தான் இருக்கிறார்; அணுப் பொழுதும் நம்மை விட்டு அகலாமல் நமதுஇதய உணர்வோடு ஒன்றிக் கலந்திருக்கிறார்; அவரை என்றைக்கும் நாம்மறப்பதில்லை; மறக்கவும் மாட்டோம் என்பதற்கு அடையாளமாகத் தான் இ மறப்பதில்லை; மறக்கவும் மாட்டோம் என்பதற்கு அடையாளமாகத் தான் இந்தத்தேர்தலில் கழகத்தினர் பெறுகின்ற வெற்றி தோல்விகளைப் பொறுத்து;இயக்கத்தின் தொடக்கக் காலத்திலிருந்து நாம் ஏற்றுக் கொண்டுள்ள “அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயத்தை
அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; 

இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” திணிப்பை என்றும் எதிர்ப்போம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி”என்ற இந்த ஐம்பெரும் முழக்கங்கள் நம்முடைய நெஞ்சத்தில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்க - ஒலித்துக் கொண்டிருக்க - கடமை உணர்வுக்கும், கண்ணிய நடவடிக்கை கடமை உணர்வுக்கும், கண்ணிய நடவடிக்கைகளுக்கும், அண்ணா வழியை நெஞ்சாரப் பின்பற்றி, எல்லாவற்றுக்கும் மேலாககட்டுப்பாடு குலையாமல் கட்டுப்பாடு குலையாமல் காக்கின்ற, பெரும் பணியில் நம்மையெல்லாம் காக்கின்ற, பெரும் பணியில் நம்மையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரியாரின் வழியை மறவாமல் பாதுகாத்தும், நமது ஆளாக்கிய தந்தை பெரியாரின் வழியை மறவாமல் பாதுகாத்தும், நமது இயக்கத்தையும் பாதுகாத்து, நம்முடைய எதிர்கால திராவிட சந்ததியினரை இயக்கத்தையும் பாதுகாத்து, நம்முடைய எதிர்கால திராவிட சந்ததியினரையும்,தன்மான உணர்வோடு, தலை சிறந்து வாழ்ந்திட வழி வகுத்தும், நடை போடுவதற்கு போடுவதற்கு ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பணி மேலும் ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பணி மேலும் மேலும் சிறந்தோங்க தொய்வின்றி தொடர்ந்து நடைபோட மேலும் சிறந்தோங்க தொய்வின்றி தொடர்ந்து நடைபோடஇந்த 14வது கழகப்  பொதுத் தேர்தலும் பயன்படுமாக!’nakkheeran.in

கருத்துகள் இல்லை: