டெல்லி: நிதிச்சுமையால் சுமார் 400 விமான சேவைகளை ஸ்பைஸ் ஜெட்
நிறுவனம் ரத்து செய்துள்ளதால் விடுமுறைக்கு பல்வேறு இடங்களுக்கு செல்ல
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தற்போது தவித்து வருகிறார்கள்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி நிதிச் சுமையில் சிக்கியுள்ளது.
இதனால் அந்நிறுவனம் திடீர் என சுமார் 400 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
முன்னதாக ஸ்பைஸ்ஜெட் சலுகை விலையில் டிக்கெட் அளித்தது. இதையடுத்து பலர்
தங்கள் விடுமுறையை கழிக்க தாங்கள் செல்லும் இடங்களுக்கான டிக்கெட்டை
ஸ்பைஸ்ஜெட்டில் வாங்கினர்.
தற்போது விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மக்களின் விடுமுறை கொண்டாட்டத்திற்கு ஆப்பு வைத்த ஸ்பைஸ் ஜெட் பலரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்ல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். தற்போது அவர்கள் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு ஸ்பைஸ் ஜெட் நிறுவன வாசலில் நிற்பதுடன் கூடுதல் பணம் செலுத்தி வேறு விமான நிறுவன டிக்கெட்டை வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து டிக்கெட் வாங்கிவிட்டு தற்போது தவிக்கும் டெல்லியைச் சேர்ந்த ஷாலினி தவான் கூறுகையில், நாங்கள் ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் இருந்து மும்பை மற்றும் கோவா செல்ல டிக்கெட் வாங்கினோம். ஆனால் தற்போது டிக்கெட் பணத்தை கேட்டும் விமான நிறுவனத்திடம் இருந்து பதில் இல்லை. என் குடும்பத்திற்கு விமான டிக்கெட் எடுக்க ரூ.75 ஆயிரம் ஆகும். அதனால் பயணத்தை ரத்து செய்ய வேண்டி உள்ளது என்றார்.
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக