தி.மு.க.,வில் நடந்து வரும் உட்கட்சித் தேர்தலில், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை, துரைமுருகன் ராஜினாமா விவகாரம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, பதவி விலகல் கடிதம் எழுதியதை, துரைமுருகன் மறுத்துள்ள போதிலும், இதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மையை, தி.மு.க., வட்டாரம் உறுதிபடுத்துகிறது.
கலைஞர் இல்லையென்றல் திமுக என்னவாகும்? அதை இப்போதே பார்த்து விட்டோம் கலைஞர் உண்மையில் ஒரு சிறந்த நிர்வாகி அவர் ஆட்சியில் இருக்கும் போது கூட நன்றாகவே நிவாகம் செய்யக்கூடியவர் ஸ்டாலினுக்கு அதுவும் முட்டை தான் அதிகாரிகள் செயலரிடம் எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விலாச வைத்து சுலபமா சுருண்டு குப்புற விழ வைத்து விட்டார் அப்படியெல்லாம் கலைஞர் செய்யமாட்டார் எல்லாம் அறிந்தவர் நேரடியா கொஞ்சம் கண்டிப்புடன் செய்து நிறையா மக்களுக்கு செய்துள்ளார் மக்களை கவர முடியாதவர் ஸ்டாலின் தனக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை வைத்து கொண்டு நிர்வாகம் செய்ய நினைக்கிறார்
வேலூர் கிழக்கு மாவட்ட செயலர் பதவியை, தன் மகன் கதிர் ஆனந்துக்கு கிடைக்க செய்ய, முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலருமான துரைமுருகன் முயற்சி எடுத்தார். அதற்கு, கட்சி பொருளாளர் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டதால் ஏற்பட்ட அதிருப்தியையும் கோபத்தையும் கருணாநிதியிடம் துரைமுருகன் கொட்டி தீர்த்துள்ளார். அதன் விளைவாக, ஸ்டாலினுக்கு 'செக்' வைக்கும் விதமாக, கருணாநிதி ஒரு பட்டியல் தயாரித்துள்ளார். அந்த பட்டியலில், 12 பேர் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த, 12 பேருக்கும் மாவட்டச் செயலர் பதவி தரக் கூடாது என, கருணாநிதி போர்க்கொடி தூக்கி உள்ளார். இந்த 12 பேரும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் என்பதால், இந்த விவகாரத்தில் யார் கை ஓங்கும் என்ற கேள்வி, தி.மு.க.,வில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் மேலும் கூறியதாவது: கட்சி கட்டுப்பாடு முழுவதும் ஸ்டாலின் கைக்கு போய் விட்டதால், ஸ்டாலின் ஆதரவு இல்லாதவர்களால், ஒரு எல்லையை தாண்டி செயல்பட முடியவில்லை. இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஸ்டாலின் ஆதரவு மாஜிக்கள், தேர்தலை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களும், முறையான விசாரணை இன்றி கிடக்கின்றன. இந்த நிலையில், கடும் அதிருப்தி அடைந்த கருணாநிதி, 12 பேர் பதவிக்கு வருவதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.என். நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், சுதர்சனம், ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன், பொங்கலூர் பழனிசாமி, சுப தங்கவேலன் மற்றும் ஈரோடு என்.கே.கே.பி. ராஜா, தூத்துக்குடி பெரிய சாமி, கருப்பசாமி பாண்டியன், ராணிப்பேட்டை காந்தி ஆகிய 12 பேர், அவரது 'ஹிட் லிஸ்ட்'டில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களை மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்பதில், இவர் பிடிவாதமாக இருக்கிறார். இந்த போட்டியில் வெல்லப் போவது யார் என்ற கேள்விதான், அறிவாலயத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.
இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது. கட்சியில் பொருளாளர் ஸ்டாலினின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு, கட்சியின் உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக இருக்கும் கனிமொழியை, கட்சி நிர்வாக அமைப்பில், துணைப் பொதுச் செயலர் பொறுப்பில் நியமிக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலின் எதிர்ப்பு கோஷ்டி, ஆதரவு கோஷ்டி என, இரண்டு கோஷ்டிகள் வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கனவே, இதே உட்கட்சித் தேர்தல் பிரச்னை தொடர்பாக, தலைமையிடம் நியாயம் கேட்ட மதுரை அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர்கள் தென் மாவட்டங்களில் கட்சிக்கு எதிரான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: துரைமுருகன் மகன், மாவட்ட செயலர் பதவிக்கு போட்டியிட்டு, முறைப்படி தேர்தல் நடந்தால், அவர் தான் வெற்றி பெறுவார். ஓட்டுப் போடும் தகுதியுடையவர்கள் மத்தியில் அவருக்குத்தான் செல்வாக்கு உள்ளது. இருந்தும், அவரை மாவட்ட செயலராகக் கொண்டு வருவதற்கு, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் விரும்பவில்லை. துரைமுருகனை அழைத்து, உங்கப் பையனுக்கு மாவட்ட செயலராக செயல்படும் அளவுக்கு திறமை இல்லை என சொல்ல, துரைமுருகன் கொந்தளித்து விட்டார். இதனால், அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லும் அளவுக்கு நிலைமை சீரியஸாகி விட்டது. இது, கட்சித் தலைவர் கருணாநிதியை ரொம்பவும் பாதித்து விட்டது. இதை இப்படியே தொடர வேண்டாம் என நினைக்கிறார். அதற்காக, அவர் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரிடம் பேசியிருக்கிறார். அவர்களில் பலரும், கட்சியில் ஒருத்தருக்கே முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இப்படிப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. அதனால், கட்சியில் எல்லா நிலையிலும் தகுதிகளுடன் இருக்கும் கனிமொழியையும், நிர்வாகப் பொறுப்பில் கொண்டு வந்து, அவரையும் நிர்வாகத்தில் முழுமையாக ஈடுபட வைக்கலாம் என, சொல்ல, அதன்படி செய்ய முடிவெடுத்துவிட்டார். அதற்காக, கனிமொழியை கட்சியின் துணைப் பொதுச் செயலராக்க முடிவெடுத்து விட்டார். இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக