சனி, 20 டிசம்பர், 2014

Policeஅதிகாரிகள் வீடுகளில் அடிமைவேலை செய்யும் போலீசாருக்கு விடுதலை எப்போது?


உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி' போலீசார், அடிமை வாழ்வில் இருந்து, விடுதலை கிடைக்காதா என, ஏக்கத்துடன் உள்ளனர்.தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., - கூடுதல் டி.ஜி.பி., முதல், காவலர் வரை, 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 5,000 போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்யும், 'ஆர்டர்லி'யாக உள்ளனர்.உயர் போலீஸ் அதிகாரிகளின் வாரிசுகளை, பள்ளி, கல்லூரிக்கு அழைத்து செல்லுதல், காய்கறி வாங்கி வருதல், தோட்டம் மற்றும் நாய் பராமரிப்பாளர், குடும்பத் தலைவியை அழகு நிலையம் அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், 'ஆர்டர்லி' போலீசார் பலர், மனம் வெதும்பிய நிலையில் உள்ளனர்.  A parliamentary panel wants the government to completely abolish the 'orderly system' — posting of low-ranking cops (mainly constables) as orderlies at residences of senior police officers from police forces.
Maintaining that the orderly system affected the morale of police personnel who are trained to do regular policing jobs, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மக்களின் முதல்வருக்கும் கூட வெட்கமில்லாமல் நூற்றுக்கணக்கில் அடிமைகள் இருக்கும் பொழுது இதெல்லாம் என்ன விசயம்... அடிமை தேசம்....


இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, 'ஆர்டர்லி' போலீசார் கூறியதாவது:மிடுக்கான சீருடை அணிந்து, மக்கள் சேவையாற்ற தான், போலீஸ் வேலைக்கு வந்தோம். இப்படி நடத்தப்படுவோம் என, கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சில போலீசார், பணிச்சுமைக்கு பயந்து, 'ஆர்டர்லி'யாக, அதிகாரிகளிடம் ஒட்டிக் கொள்கின்றனர். இதனால், பதவி உயர்வு, விருது, சலுகை பெறும் பட்டியலில், எப்போதும் இடம் பெற்று விடுகின்றனர்.இதனால், ஒரு தலைமுறை போலீசார், காவல் நிலைய நடைமுறை, புலன் விசாரணை, குற்ற வாளிகளை கைது செய்தல், நீதிமன்றத்தில், குற்றவாளி களுக்கு தண்டனை பெற்று தருதல் போன்ற எந்த நடைமுறையும் தெரியாமல், மழுங்கடிக்கப்பட்டுள்ளனர்.அதுபோல், எங்களையும் அடிமையாக்க பார்க்கின்றனர். இந்த அடிமை வாழ்வில் இருந்து, எங்களுக்கு விடுதலை வேண்டும்.'ஆர்டர்லி' முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, உள்துறை செயலர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


குடும்பத்தாரின் உடனடி தேவைக்கு



'ஆர்டர்லி' நியமனம் குறித்து, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரும், 'ஆர்டர்லி'யை நியமித்து கொள்கின்றனர் என, சொல்லிவிட முடியாது. மேலும், யாரை வேண்டுமானாலும், 'ஆர்டர்லி'யாக்கவும் இயலாது.'ஆர்டர்லி'யாக வேலை பார்க்க வேண்டும் என, யாரையும் நிர்பந்திப்பது இல்லை. சில போலீசார், நம்பிக்கை பெற்றவர் களாக இருப்பர். அவர்கள் தான், 'ஆர்டர்லி'யாக நீடிக்கின்றனர்.உயர் போலீஸ் அதிகாரிகளில், 24 மணி நேரமும், துறை சார்ந்து பணியாற்ற வேண்டி இருப்பதால், குடும்பத்தாரின் உடனடி தேவைக்கு, போலீசாரின் உதவியை நாட வேண்டி உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை: