திங்கள், 13 செப்டம்பர், 2010

விமானத்தில் குழந்தை பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற பெண்

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வந்த கல்ப் ஏர் வி்மானத்தில் பயணித்த ஒரு பெண், விமான கழிப்பறையில் வைத்து குழந்தை பெற்று, அதை காகிதத்தில் சுற்றி கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தை சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஈவு இரக்கமற்ற அந்தப் பெண்ணைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த விமானம் சவூதி அரேபியாவிலிருந்து மணிலாவுக்கு வந்தது. விமானம் வந்து சேர்ந்து அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் விமான துப்புறவாளர்கள் உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அந்த விமானம் பஹ்ரைன் செல்லத் தயாரானது. அப்போதுதான் விமானக் கழிப்பறையில் குழந்தை காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை மீட்டனர்.

பின்னர் விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையை சோதித்துப் பார்த்தனர். அது நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து கல்ப் ஏர் நிறுவனத்தினர் கூடி அக்குழந்தைக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் என பெயரிட்டனர். பின்னர் நினோய் அகினோ மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அக்குழந்தையின் தாயார் யார், எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை. அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்தப் பெண் எப்படி கழிப்பறைக்குப் போய் குழந்தை பெற்றார், எந்தவித சுவடும் இல்லாமல் எப்படி வந்து இருக்கையில் அமர்ந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் குழந்தை பெற்றபோது எந்தவித சப்தத்தையும் சக பயணிகள் கேட்கவில்லையாம்.

இக்குழந்தை குறித்து டாக்டர் மரியா தெரசா அகோரஸ் கூறுகையில், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், சரியான எடையுடன் உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களே சேர்ந்து பெயரும் சூட்டியுள்ளனர் என்றார் புன்னகையுடன். அக்குழந்தைக்கு விமான நிலைய ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தாடைகளையும் வாங்கிக் குவித்து விட்டனர். மேலும் கிலுகிலுப்பை உள்ளிட்ட பொம்மைகளும் வாங்கி குழந்தையை கண்டு களித்து வருகின்றனராம்.

கடந்த ஜூலை மாதம் இதேபோல இந்தியப் பெண் ஒருவர் விமானத்தில் குழந்தை பெற்று அதை விமான டாய்லெட்டில் போட்டு கொல்ல முயற்சித்துப் பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.
பதிவு செய்தது: 13 Sep 2010 6:15 pm
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பிளிப்பைனிகள் பெரும்பாலும் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டு விட்டு, பின் பிள்ளை பெற்று தவிக்க விடுவது வாழ்டிக்கையாகி போய்விட்டது


பதிவு செய்தவர்: ரெக்ஸ்
பதிவு செய்தது: 13 Sep 2010 6:06 pm
வாழ்க அந்த நல் உள்ளங்கள் .
பதிவு செய்தவர்: எனக்கு ஒரு உண்மை தெரியனும்
பதிவு செய்தது: 13 Sep 2010 5:56 pm
என்ன கதை இது..எட்டு மாசத்துக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்ணை விமானத்தில் ஏற்ற அனுமதி கிடையாது ..அப்படி இருக்க இந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை எப்படி விமானத்தில் அனுமதித்தார்கள்

பதிவு செய்தவர்: ஞானேஸ்வரி
பதிவு செய்தது: 13 Sep 2010 5:51 pm
நம்ம ஊரில் பெண் குழந்தைகளை இப்படி தான் கருவுற்ற போதே கொன்று கூவிதார்கள் நமது மக்கள். இப்போது தமிழகத்தில் ஆண்கள் வித்திகச்சரம் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் உள்ளனர், இப்படியே நிலைமை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் ஒரு பென்னுக்கு இரண்டு ஆண்கள் என்ற விகிதாசாரம் ஆகிவிடும். அப்போது தெரியும் பெண் குழந்தைகளின் அருமையை நம் மக்களுக்கு.

பதிவு செய்தவர்: பம்பள விநாயகம்
பதிவு செய்தது: 13 Sep 2010 5:40 pm
அவளுக்கு ஓ.... க்... க... மட்டும் தெரியும் போல சு....ன்.... னிக்கு மட்டும் அவள் அடிமை
பதிவு செய்தவர்: பாஸ்
பதிவு செய்தது: 13 Sep 2010 5:44 pm
குழந்தை பெதுகவும் தெரியும் பாஸ்
 

கருத்துகள் இல்லை: