செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தடையிலிருந்து தப்ப பிக்ஸிங்கில் ஈடுபட்டவர்களை போட்டுக் கொடுக்க ஆமிர் முடிவு

மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கியுள்ளவரான பாகிஸ்தான் [^] பந்து வீச்சாளர் முகம்மது ஆமிர், ஐசிக்கு உளவு சொல்பவராக மாறவுள்ளதாக தெரிகிறது.

தன் தலை மீது தொங்கும் வாழ்நாள் தடை என்ற பேராபத்திலிருந்து தப்பிப்பதற்காக இந்த முடிவுக்கு ஆமிர் வந்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து டெய்லி டெலிகிராப் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஸ்பாட் பிக்ஸிங் மற்றும் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் மற்றும் ஐசிசி விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஆமீர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த சூதாட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும், அதில் ஈடுபட்டிருப்போரையும் ஐசிசிக்குத் தெரிவிக்க ஆமிர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

சூதாட்டப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் [^]கேப்டன் [^] சல்மான் பட், ஆமிர் மற்றும் முகம்மது ஆசிப் ஆகியோருக்கு தற்காலிக தடையை ஐசிசி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியிடம் அனைத்துத் தகவல்களையும் போட்டுக் கொடுக்க ஆமிர் முடிவு செய்திருப்பதால் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ள பல்வேறு வீரர்கள் பீதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பதிவு செய்தவர்: nallavan
பதிவு செய்தது: 14 Sep 2010 6:51 pm
ஸ்டாப் வாட்சிங் திஸ் ஸ்டுபிட் கேம். இந்த கிரிகெட் பகிர்த உடுங்கட அப்போதான் நீங்க உருபடுவிங்க. எதாவது வேல வெட்டி இருந்த பாருங்க அய்யா பாருங்க !!!!

பதிவு செய்தவர்: குப்பை மீடியா
பதிவு செய்தது: 14 Sep 2010 6:23 pm
மீடியாக்கள் சம்பாதிப்பதற்காக சூதாட்ட கிரிகெட்டை அளவுக்கு மீறி விளம்பரப்படுத்தி மக்களை கெடுத்து குட்டிச்சுவராக்குகின்றனர். இவர்கள் சூதாட்டம் நடத்தி மில்லியன்கள் சம்பாதித்து மக்களின் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணாக்குகின்றனர்.பாழாய்ப்போன சூதாட்ட கிரிகெட் இனி இந்தியாவிற்கு வேண்டாம்

கருத்துகள் இல்லை: