தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்
(அ. விஜயன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் பலயீனத்தைப் பயன்படுத்தி, வீரவசனம் பேசி காலத்தைக் கடத்துவதாகவும், அக் கூட்டமைப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலான நாட்களை வெளிநாட்டில் கழிப்பதாகவும் தன்னை எந்த விடயத்திலும் கலந்தாலோசிப்பதில்லை பிறகு நான் எதற்கு கூட்டமைப்பில் இருப்பான் என அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பா.உ ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால் போல் கூறியுள்ளார்.
இவை அவருக்கு தற்போதாவது புரிந்திருக்கிறது. இது கூட்டணியின் வரலாறு தெரிந்தவர்களுக்கு எப்போதே தெரிந்த ஒரு விடயம். காசி ஆனந்தன், வன்னைஆனந்தன், சேனாதிராசா இவர்களது வீர பேச்சுக்களைக் கேட்டு பல இளைஞர்கள் தங்கள் கைகளை பிளேட்ரால் கீறி ரத்தத்திலகமிட்டது, சிறை சென்றது இதனால் தங்களது வாழ்கையையே அழித்தது என்பவை வராலாறாகவே போய்விட்டது. ஆனால் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன?
இந்த விடயத்தில் மக்களும் சிந்திக்க வேண்டும். நடந்தமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அம்பாறை மாட்டட தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ போல் சிந்தித்திருந்தால் இந்த வாய் வீச்சுகாரர்கள் பாராளுமன்றம் சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் மக்கள் சிந்திக்க தவறிவிட்டனர்.
இந்தக்கட்சியின் ஆரம்பகாலத்தில் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சற்று நோக்க வேண்டியுள்ளது. இவர்களை தோளில் தூக்கி சுமந்து ஆட்டம்போட்டவை நினைவுக்கு வருகிறது. பாராளுமன்றம் சென்றவர்கள் தோளில் தூக்கிய தொண்டனை நினைப்பதில்லை.அவனுக்காகவோ அவன் குடும்பத்துக்காகவோ அவர்கள் எதையும் செய்யவில்லை. மாறாக பாராளுமன்ற சம்பளம், அதன் மூலம் கிடைக்கும் சகலதையும் அனுபவித்துக் கொண்டு இருப்பதே, இருந்தததே இவர்களது வரலாறு. தன்னோடு கூட இருந்தவனுக்கும் ஒன்றும் செய்யவில்லை.தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் பாராளுமன்றத்துக்கு இலகுவாக சென்றுவிடுகிறார்கள். அவர்களது ஒரே மூலதனம் மக்களிடம் உள்ள பலயீனமே? அதனை வைத்து அவர்கள் பேசும் வெற்று வீர பேச்சுமட்டுமே?
இலங்கையில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுடன் ஒரு இணக்கபாட்டுடன் போவதே மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழியாக இனி வரும்காலங்களில் அமையவேண்டும். அப்படித்தான் இனி இலங்கை அரசியல் நகர்வுகள் செல்லப்போகிறது.
வீரப்பு பேசியதால் இன்று தமிழ் சமூகம் எப்படி ஒரு கேவலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள் என்பதை சிந்திக்க வேண்டியகாலமிது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களவனுடன் இணக்கப்பாட்டு அரசியல் நடத்தலாமா? அவர்கள் ஏறி மிதிக்கமாட்டார்களா? என சிலர் கேட்கிறார்கள் அப்படி கேட்பவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். நம்மால் ஒன்றுக்கும் முடியாது, என பல சந்தர்பங்களில் நாம் நிரூபித்துவிட்டோம். இனி நாம் அப்படி நடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை முதலில் புரிய வேண்டும்.
இப்போ அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ பியசேனாவுக்கு புரிந்திருக்கிறது. இது அனைவருக்கும் புரிய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல் ஏமாற்றும் கட்சிகள் தமிழர் மத்தியில் தோன்றவே கூடாது. அதனால் தமிழர்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக