்
நாட்டில் தோன்றியுள்ள அமைதி காரணமாக மக்கள் தங்கள் கட மைகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளதுடன் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்குச் சென்று வருவதற்கும் அனைத்து இன மக்களும் பேதமின்றி அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் ஆங்காங்கே நிகழும் ஓரு சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் இனங்களிடையே குரோத உணர்வுகளையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளியெறியாதுபோனால் முறுகல் நிலையே அதிகரிக்க வழிவகுப்பதுடன் மக்கள் மத்தியில் அநாவசியமான பதற்றத்துக்கும் வழிசெய்வதாக அமையும்.
குறிப்பாக நிவித்திகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேல தோட்டத் தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இரு வீடுகள் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 10க் கும் மேற்பட்ட வீடுகளின் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. குடியிருப்புக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேல குக்குலகல பிரிவு தோட்டத்திலேயே இந்த விபரித சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இதற்கான பின்னணி என்ன என்று பார்க்கையில், கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் உள்ள தோட்ட பெரும்பான்மையின காவற்காரர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து திங்களன்று சடலமாக அவர் கர விட்ட திம்மியாவ எனுமிடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்தே குக்குலகல பகுதியிலுள்ள சில வீடுகள் மீது இனந்தெரியாதோர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அன்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் தேல மேற்பிரிவு தோட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பெரும் பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தோட்டத் தில் இருவேறு பிரிவுகளில் கடந்த திங்கட் கிழமை மாலை இடம்பெற்ற இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து சுமார் 100 குடும்பங்கள் அச்சம் காரணமாக இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக