அரசியலைவிட, அவரது உடல்நிலை குறித்தே அதிகம் சொல்லப்படுகிறது. 'வெயிட்' கூடி வருவது குறித்து கவலைப்பட்ட ஜெ, அதைக் குறைக்கும் முயற்சிக்கான சிகிச்சைக்காகவே கொடநாடு சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு அதற்கான முயற்சியை கொடநாட்டில் ஜெயலலிதா மேற்கொண் டார். தினமும் உடற்பயிற்சி செய்வதில் தொடங்கி, சாப்பாடு விஷயத்தில் காட்ட வேண்டிய கறார் தன்மை வரை மருத்துவர்கள் கொடுத்த ஆலோச னையை மீறாமல் ஜெயலலிதா பின்பற்றியதால், ஒன்பது கிலோ எடை குறைந்திருக்கிறது. பின்னர், சென்னை திரும்பிய ஜெயலலிதா, போயஸ் கார்ட னுக்குள் சுமார் 35 நிமிடங்கள் தினமும் நடந்திருக் கிறார். எனவே, உடல் எடை கூடாமல் இருந்திருக் கிறது. அந்த நடைப்பயிற்சி நாளுக்கு நாள் குறைந் தது. இதனால், மறுபடி கொஞ்சம் வெயிட் கூடியது.
இதை அவருக்கு திருச்சி பொதுக்கூட்டம் உணர்த்தியது. சுமார் இரண்டு மணி நேரம் நின்று கொண்டே பேசினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அவருக்குக் கால் வலியும் லேசான உடல் சோர்வும் ஏற்பட்டதாம்.அடுத்த சில நாட்களில் சென்னை இம்பீரியலில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கு, கொஞ்சம் பெரிதாகவே தயாரிக்கப்பட்ட உரையை எடுத்து வந்திருந்தார் ஜெயலலிதா. பொதுவாக, நோன்பு திறப்பு விழாக்களில் போடியம் வைக்கப்படுவது இல்லை. கஞ்சி குடிப்பதற்கு வசதியாக நீளமான மேஜைகள் மட்டுமே இருந்தன. அதன் மீதுவைக்கப் பட்ட மைக்கில் பேச ஆரம்பித்த ஜெயலலிதா, ஒரு கையில் தனது பேச்சுக்கான ஃபைலை வைத்துக்கொண்டார். இன்னொரு கையை மேஜை மீது வைத்து தாங்கி நின்றுகொண்டார். 10 நிமிடங்களுக்கும் மேலாகக் கையை ஊன்றியபடியே பேசிய காட்சி அவரது சிரமத்தை வெளிப்படுத்தியது.
அடுத்ததாக, சில நாட்கள் கழித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றார் ஜெயலலிதா. கோயில் வாசலில் இருந்து உள்ளே அவர் நடந்து செல்ல சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. 'இதெல்லாம் எதுக்கு? எடுத்துடுங்க!' என்று மறுத்துவிட்டு, கருங்கல் தரையில் நடக்க ஆரம்பித்தார். மதியம் 3 மணி என்பதால், நல்ல வெயில். கால் சூடு தாங்கா மல் ஒரு சில நொடிகள் மட்டுமே சிவப்புக் கம்பளத்தில் கால்வைத்தவர், பெரும்பாலும் சூட்டைத் தாங்கிக்கொண்டார்.
ஆரியபட்டாள் வாசலுக்கு அடுத்ததாக ஒரு பிராகாரம் இருக்கிறது. அதைத் தாண்டிய பிறகு, அவரால் தொடர்ச்சியாக நடக்க முடியவில்லை. இதை முன்னதாக உணர்ந்ததால், தனது உதவி யாளரிடம் நாற்காலி ஒன்று எடுத்து வர உத்தர விட்டு இருந்தார் ஜெயலலிதா. அந்த நாற்காலியில் சில நொடிகள் உட்கார்ந்தார். மறுபடி நடந்தார். மீண்டும் உட்கார்ந்தார். எழுந்து நடந்தார். இப்படி மூன்று முறை உட்கார்ந்து எழுந்த பிறகே அவரால் நடக்க முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களோடு... அதன்பின் தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல் பிரசாரங்களும் நினைவுக்கு வர, கேரள ஆயுர்வேத முறைப்படி சில சிகிச்சைமுறைகளை இப்போதே மேற்கொள்ளலாம் என யோசிக்கத் துவங்கி விட்டாராம்.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைக் குறைத்தால் மட்டும் போதாது. காய்கறி சூப் வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம் அதற்காக சாப்பாட்டைக் குறைக்கவோ, அல்லது சாப்பிடாமல் இருக்கவோ கூடாது என்று சொல்லப்பட்டுஉள்ளதாம்.
திருச்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அன்று, மதிய உணவை ஜெயலலிதா சாப்பிடவில்லை. சாப்பி டாமல் இருந்தால் உடல் சோர்வு அதிகமாகி விடும் என்றார்களாம் மருத்துவர்கள்.
அனைத்துக்கும் மேலாக, ஜெயலலிதா சாக்லேட் பிரியை. எடையை அதிகமாக்கியதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். கொடநாடு செல்வதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பு, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல பல் மருத்துவரைத் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சந்தித்தாராம் ஜெயலலிதா. 'தொடர்ச்சியாகப் பல்வலி இருந்ததால்தான், இந்தச் சந்திப்பு நடந்தது' என்றும் கூறுகிறார்கள்.
போயஸ் கார்டனை வலம் வரும் சிலர், 'கார்டனுக்குள் உள்ள எலெக்ட்ரிக்கல் சப்ளையை முழுமையாக எடுத்துவிட்டு புதிய சாதனங்கள் பொருத்தும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. நாள்பட்ட வயர், சுவிட்ச் போர்டுகளாக அவை உள்ளன. மேலும், ஏ.சி முழுமையாக மாற்றப்பட உள்ளது. இந்த வேலைகள் நடக்கும்போது அம்மா இங்கு இருக்க முடியாது என்பதால்தான், ஒரு மாத கால அளவுக்கு கொடநாட்டில் தங்க முடிவெடுத்தார்' என்று காரணம் சொல்கிறார்கள்.எது, எப்படியோ... ஜெயலலிதா கார்டனில் இருந்தாலும், கொடநாடு போனாலும் இப்போதெல்லாம் அது ஸ்பெஷல் நியூஸ் ஆகிவிடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக