வியாழன், 16 செப்டம்பர், 2010

போனில் மிரட்டல்... வீட்டில் கல்வீச்சு... இதெல்லாம் படம் ஓடுவதற்காக சாமி

சிந்துசமவெளி படம் வெளிவருவதற்கு முன்பு ஆரம்பித்த சர்ச்சை படம் வெளிவந்த பிற இருமடங்கு, மும்மடங்குன்னு உயர்ந்து விட்டது. போனில் மிரட்டல்... வீட்டில் கல்வீச்சு... இதெல்லாம் படம் ஓடுவதற்காக சாமி போட்ட திட்டம்... இப்படி பல வம்பு வழக்குகளின் பரபரப்புகள் எழுந்து ஓய்தும் விட்டது. இயக்குனர் சாமியும் அடுத்தப் படத்தை தொடங்கும் வேலையில் மும்முரமாகிவிட்டார்.
 
ஏன் இப்படி சர்ச்சைக்குறிய படங்களையே எடுக்குறீங்க...? என்ற கேள்வியை மட்டும் சாமியிடம் யாரும் கேட்டால் போதும், சும்மா,‘கொதிக்கிற எண்ணையில் கொட்டிய கடுகாக’ பொறிகிறார் சாமி.

“ஏற்கனவே உயிர், மிருகம் படங்கள் சர்ச்சைக்குறிய படங்களாக இருந்ததால், இனியும் அந்த மாதிரி இருக்கக் கூடாதென்றுதான் ‘சரித்திரம்’ படத்தை இயக்கினேன். இது தமிழனின் தற்காப்பு கலைகள் பற்றி சொல்கிற படம். ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிற்குது. பத்து ரீல் எடுத்தாச்சு. இன்னும் மூணு ரீல்தான் பாக்கி. முப்பது நாட்கள் படப்பிடிப்பு மட்டும் நடந்தால், பிரமாதமான படமாக ‘சரித்திரம்’ வெளிவரும். 
அந்தப் படம் நின்றதாலதான் ‘சிந்து சமவெளி’ எடுக்க வேண்டிய சூழ்நிலை. விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா...?

நான் எங்கே போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்தத் தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் ‘சிந்துசமவெளி’.

இப்போது எனது அடுத்தப் படம் தயாரகிவிட்டது. இது நிச்சயமாக சர்ச்சையான கதையாக இருக்காது. இது பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட குடும்பக் கதையாகும். படத்திற்கு “சதம்” என்று பெயர். மூனு நாலு தயாரிப்பாளர்கள் வந்து படம் பண்ண கேக்குறாங்க. இனிமேதான் தாயரிப்பாளர் யாருன்னு முடிவாகும். அதற்கு பிறகுதான் நடிகர்கள் தேர்வு. கூடிய விரைவில் ‘சதம்’ படம் தொடங்கப்பட்டுவிடும்”. என்று தனது ஆதங்கத்தையும், ஆவேசத்தையும் வெளிப்படுத்துகிறார் சாமி.  

“கே.பாலசந்தர் படங்கள் மாதிரிதான் எனது படங்கள். அவர் இப்போது படம் பண்ணுவதில்லை. அதான், நான் அவரின் இடத்தை நிரப்புறேன்” என்று கூறிவரும் சாமி,‘சதம்’ குடும்பப்பாங்கான கதை என்று சொல்லியிருப்பது யோசிக்க வைக்குது. இதில் மூனு நாலு தயாரிப்பாளார்கள் போட்டி வேற போடுறாங்கலாம்.

ம்ம்ம்...பொறுத்திருந்து பார்ப்போம் சதம் நல்ல பதமான படமான்னு.

கருத்துகள் இல்லை: