சத்தியாக் கிரகத்தில் சங்கதி
அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம் பெற்றது.
அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம் பெற்றது.
முதல் நாளன்று சபை அமர்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடிந்ததால் ஆளுங்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தனர். இப்படிப் புறப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான பிரதமர் டி.எம். ஜயரட்னவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சத்தியாக்கிரகம் நடைபெற்ற மேடைக்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்துமாறு பணித்த பிரதமர் அதிலிருந்து இறங்கி சத்தியாக்கிரக மேடைக்கு வந்தார்.
மேடையில் பிரதமரை கைலாகு கொடுத்து வரவேற்ற ரணில் விக்கிரமசிங்க’ “இதோ பிரதமரும் எங்களுடன் மேடைக்கு வந்துவிட்டார். வந்து எங்களுடன் உட்காருங்கள்’ என்றார் கிண்டலாக. ரணிலின் இந்த நகைச்சுவைக்கு சற்று புன்னகைத்தார் பிரதமர். “எங்களுக்கு நன்றாகத் தெரியும். அரசியலமைப்புத் திருத்தத்தை சுதந்திரக் கட்சிக்குள் பலர் எதிர்க்கிறார்கள். ஏன் நீங்கள் கூட உள்ளுர விரும்புகிறீர்களோ தெரியவில்லை. நீங்கள் உங்களுக்காகவும் தான் இந்த சத்தியாக்கிரகத்தை செய்கிறோம்’ என்று மீண்டும் கூறினார் ரணில்.
“ஐயோ சும்மா வம்பில் மாட்டிவிடாதீர்கள். நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம். சத்தியாக்கிரகம் இருக்கும் உங்களின் சுக துக்கங்களை விசாரிக்கவே நான் வந்தேன். உங்களின் எதிர்ப்புக்களை நாடாளுமன்றத்திற்கு வந்து கூறியிருக்கலாமே’ என்று கூறிய பிரதமர் டி.எம்.ஜயரட்ண அங்கிருந்தவர்களுடன் கலகலப்பாக உரையாடிவிட்டு வெளியேறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக