வியாழன், 16 செப்டம்பர், 2010

தனித்துவம் மிக்க தலைவர் எம்.எச்.எம். அஷ்ர/ப், நினைவு தினம் இன்று

ஏ.எல். அப்துல் மஜீட் (சிரேஷ்ட பிரதித்தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.)
நினைவு தினம் இன்று
உலக வரலாற்றில் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் உருவாகி வரும் தலைவர் கள் மனவலிமையும் வெற்றிகரமான மூளைவளமும் நெஞ்சுறுதியும் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். இந்நாட்டின் வரலாற்றில் இத்தகையதொரு தலைமைத்துவம் கிழக்கிலிருந்தும் வெளிப்பட்டது. கிழக்கிழங்கை முஸ்லிம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும். முஸ்லிம்கள் அடர்த்தியாகவும் செறிவாகவும் வாழும் இப்பிரதேசமானது தனது வரலாற்றில் தனக்கென தனித்துவமிக்க தலமைத்துவத்தை உருவாக்கி வரலாறு படைத்துக்கொண்டது. இவ்வரலாறு என்பது அஷ்ரஃப் எனும் பெரும் ஆளுமையாகும். இலங்கை அரசியலில் அஷ்ரஃப் ஏற்படுத்திய அதிர்வுகள் சிறுபான்மைச் சமூகம் ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதித்துக்காட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. கிழக்கில் புகழ்பூத்த குடும்பத்தில் அஷ்ரஃப் பிறந்தார். கல்வி பயின்ற காலத்தில் சாரணத் தலைவராகவும் இளைஞர் மன்றத் தலைவராகவும் தமிழ் சங்கத் தலைவராகவும் முதலுதவிச் சங்கத் தலைவராகவும் பல பொறுப்புக்களை வகித்து தலைமைத்துவ பண்புகளை இள வயதில் வளர்த்துக்கொண்டார். அஷ்ரஃப் அவர்களின் அரசியல் தலைமைத்துவம் திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. இவரது தலைமைத்துவம் படிப்படியாகவே உருவாகி வெளிப்பட்டது என்பதனை எம்மால் அறிய முடிகிறது. 

கருத்துகள் இல்லை: