உள்நாட்டு யுத்தம் வீணானது! அது மனித உயிர்களை காவுகொண்டது: தயா மாஸ்டர்
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது வீணாக மனித உயிர்களை காவுகொண்டதெனவும் தமிழர்கள் அதனை விரும்பவில்லை எனவும் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். தொலைபேசியூடாக பிபிஸிக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "யுத்தம் வீணானதொன்று. தமிழர்கள் அதனை விரும்பவில்லை. தமிழர்களின் முக்கிய நோக்கம் கல்வி. அது பணத்தினை வீண்விரயம் செய்தது எனக் கூறியுள்ளார்.
அவர் யாழ்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் கடமைபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
அதனோடு தான் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பையும் பேண வில்லையெனவும் தான் கே.பியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆவர். அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது சகாவான மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் அவர்களுடன் இராணுவத்திடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
comments:
அண்ணே இந்த ஞானோதயம் கொஞ்சம் முன்னாடி வந்திருந்த இவ்வளவு அழிவும் வந்திருக்காதே? ம்ம் உங்களுக்கு புலிவழியும் சரி ராஜபக்ச வழியும் சரி துட்டு வந்தால் சரிதானே? புலிவாலுப்பில்லைகள் எல்லோரும் உங்களைப் போலத்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக