வியாழன், 16 செப்டம்பர், 2010

அங்குரார்ப்பண நிகழ்வுகளை முடித்துவிட்டால் அந்த திட்டமே நிறைவடைந்து

அங்குரார்ப்பண நிகழ்வுகளோடு அடங்கிப்போகும் அபிவிருத்திப் பணிகள்
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நடந்தே றிய அபிவிருத்தித் திட்டங்கள் யாவை என்பதைப் பகிரங்கப்படுத்துவது பொதுமக்கள் அறிந்து கொள் வதற்கு உதவுவதாக அமையும். வடக்கின் வசந்தத்தை மக்கள் தெரிந்து கொள் ளும் வகையில் அந்தத் திட்டங்கள் பொது மக்களை வந்தடையவில்லை என்பதை கூறித் தானாக வேண்டும்.
அந்த நேரத்து உடைந்த தார் வீதிதான் இப் போதும் இருக்கிறது. வீதியில் உள்ள கிடங்குகள் அடையாளச் சின்னங்களாகக் காட்சி தருகின் றன எனில், வடக்கின் வசந்தம் என்று எதைச் சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது நியாய மானதே. ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது உட் கட்டுமானப் பணிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.அவ்வாறாயின் வீதிகள், பாலங்கள், போக்குவரத்துப் பாதைகள், துறைமுகங்கள் என்பவற்றின் புனரமைப்பு- புது நிர்மாணம் என் பன முக்கியமானவையாக அமையும்.
ஆனால், இவை எதுவும் வடக்கில் சாத்திய மானதாகத் தெரியவில்லை. காங்கேசன்துறை சுண்ணக்கல் கப்பல் ஏறுகிறது.மாவிட்டபுரத்தை கடல் ஆக்கிரமிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
மண்டைதீவுக் கடல் அணையை கட்டத் தவறி யதால் நெல் விளைநிலங்கள் கடலின் உவருக்குப் பலியாகிப் போயிற்று. அந்த ஊருக்காக இருந்த ஒரே ஒரு வைத்திய சாலையின் உடைந்த கட்டடங்கள் மட்டும் வானத் தைப் பார்த்த வண்ணம் தன் சாட்சியத்தை சொல்வதற்கு யாருமில்லாமல் காத்திருக்கிறது. அந்தக் கட்டடத்திற்குத் துணையாக இருந்த இரும்புக் கேடர்கள் கிலோக்கணக்கில் விற்றுத் தீர்க்கப்பட்டுவிட்டன.
நிலைமை இதுவாக இருக்கும்போது வடக் கின் வசந்தம் என்பதற்குப் பொருள் கொள்வது எங்ஙனம்? ஆக, வடக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் அங்குரார்ப்பண நிகழ்வுகள் மட்டுமேநடந்தேறுகின்றன.அங்குரார்ப்பண நிகழ்வுகளை முடித்துவிட்டால் அந்த திட்டமே நிறைவடைந்து விட்டதான நினைப்பு.
என்னசெய்வது! நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு இடப்பட்ட தாருக்குப் பின்னர் தாரைக் காணாத தலைவிதி நம் வீதிகளுக்கு. முன்பு – ஏ-9 பாதை பூட்டப்பட்டிருந்த போது தாரை எடுத்து வருவதில் கஷ்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. கப்பலால் தாரைக் கொண்டு வருவதன் மூலம் அதிக செலவை தாரைவார்க்கவேண்டும் எனக் கூறினார்கள்.
ஆனால், இப்போது ஏ-9 பாதை திறக்கப்பட்டு விட்டது. இங்கிருந்து பஞ்ச உலோகங்களும் ஏ-9 கடந்து தென்பகுதிக்குச் செல்லும்போது தென்பகுதி யில் இருந்து தாரை எடுத்துவருவதில் இருக்கக் கூடிய கடினங்கள் தான் என்ன?
எல்லாமே செப்படி வித்தை. வடக்கின் வசந்தம், அபிவிருத்தி என்ற வெற்றுப்பேச்சுக்களின் மத்தியில், மக்களோ வீதியில் விழுந்து புரண்டு எழுந்து செல்கின்றனர்.வசந்தம் வீசட்டும்! எங்கள் விதியை நாங்கள் அனுபவிப்போம்.

கருத்துகள் இல்லை: