டில்லி: ஊழல் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேரை கைது செய்து சிறையிலடைக்க கோரி மனு தாக்கல் செய்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல சீனியர் வக்கீலுமான ஷாந்தி புஷானன். பிரபல சீனியர் வக்கீலும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஷாந்திபுஷானன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதில் நீதித்துறையில் ஊழல்கள் பெருகிவிட்டன. ஊழல் நீதிபதிகளால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோட்டின் முன்னாள் நீதிபதிகள், அவர்களுக்கு பிறகு நீதிபதிகளாக வந்தவர்கள் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 16 பேர் ஊழலில் ஈடுபட்டதாகவும், அதில் 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல் புரிந்துள்ளதாகவும் அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்த ரங்கநாத்மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம். ஷர்மா, எம். வெங்கடாசலய்யா, ஏ.எம்.அகமது, ஜெ.எஸ். வர்மா, எம்.எம். பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி. பரூட்சா, பி.என். கிர்பால், ஜி.பி.பதக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லகோதி, வி.என். காரே, ஓய்.கே.சர்பர்வால் என பட்டியலிட்டு இதில் இரண்டு நீதிபதிகள் லஞ்சம் கொடுத்து நீதிபதிகளாக பதவிபெற்றதாக தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரியுள்ளார். கடந்த 1972-77-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மொரர்ஜிதேசாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஷாந்தி புஷானன். இவரது மகன் பிரசாந்த புஷானன் பிரபல சீனியர் வக்கீல் ஆவார்.
நீதிபதிகள் மீது பிரபல வழக்கறிஞர் முன்னாள் மத்திய மந்திரி ஊழல் புகார் கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. இவர்கள் கூறிய தீர்ப்புகள் எப்படி நியாமானதாக இருந்திருக்கும்? இந்தியாவை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்....
இந்த சாந்தி பூஷன்தான் முன்பு இந்திரா காந்திக்கு எதிராக அலகபாத்தில் வெற்றிகரமாக தேர்தல் மோசடி வழக்கை நிருபித்தவர். அந்த வழக்கின் தோல்வியை தாங்க முடியாமல் இந்திரா அம்மையார் எமெர்ஜென்சியை கொண்டுவந்தார். இப்படியாக இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிய அந்த வழக்கின் வீரர் சாந்தி பூஷன் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது வரவேட்கத்தக்கதே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக