சனி, 18 செப்டம்பர், 2010

புலிகளின் விசுவாசத்துக்கு திருகுதாளம் போட்டவர்களே புலிகளின் தோல்விக்கு மூலகாரணமாகினர்

மக்களே! ஆசாடபூதிகளின் வேஷத்தை கண்டறியுங்கள
விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது அரசுக்கு வெற்றி என்று யாரேனும் கூறுவார் களாயின் அதனை நூறுவீதம் ஏற்றுக் கொள் வது சரியானதாகும்.ஆனால் விடுதலைப்புலிகளை அரசு தோற் கடித்தது என்று கூறப்படும் கருத்தை நூறு வீதம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் விடுதலைப்புலிகளை போரில் வெற்றிகொள்வதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நடவடிக் கையில் ஈடுபட்டவர்கள் பலர்.அதில் விடுதலைப் புலிகளோடு சேர்ந்திருந்து அவர்களுக்கு ஆதர வாளர்கள் போல் நடித்து தங்களின் காரியங் களை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர்களே முக்கியமானவர்கள்.

விடுதலைப் புலிகளுக்குத் தவறான தகவலைக் கொடுப்பது,அதன் மூலம் தங்கள் சுயலாபத்தை அதிகரித்துக் கொள்வது என்ற செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர் அதிரடியாகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

இத்தகையவர்கள் இப்போது தங்களை தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட தூய போராளிகளாகக் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு தவறாகத் தகவலைக் கொடுத்து புலிகளின் விசுவாசத்துக்கு ஆளாகி, தங்களின் காரியங்களை கனகச் சிதமாக செய்து பிழைப்பு நடத்தியமை ஒரு புறம்.மறுபுறத்தில் படைத்தரப்பு, ஆளுந்தரப்பு என்பவற்றுடன் நல்லுறவைப் பேணி அதன் மூலம் அத்தரப்பின் கிடைப்பனவுகளை பெற்றுக் கொண்டமை என அங்கும் இங்கும் திருகுதாளம் போட்டவர்களே விடுதலைப் புலிகளின் தோல்விக்கு மூலகாரணமாகினர்.

இத்தகையவர்களை மக்கள் இனங்காணா தவரை அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமான காரியமாகும். அதேநேரம் இவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பயங்கரமானவை. அரசியல், பதவி, அதிகாரம் என்பவற்றுக்காக இவர்கள் போடக்கூடிய வேஷம் சாதாரணமானதல்ல.

இந்த வேஷங்களை புலனாய்வுத்துறையில் மிகவும் உன்னதமாக இருந்த விடுதலைப் புலிகளாலேயே கண்டறிய முடியவில்லை எனில், சாதாரண மக்களாகிய எங்களால் எப் படி முடியும்? ஓ!எனதருமை தமிழ் மக்களே! கடவுளைப் பிரார்த்தியுங்கள். இறைவா! உனது கிருபை யால் இந்த ஆசாடபூதிகளை இல்லாதொழித்து விடு. எதிர்காலத்திலாவது எங்கள் வாழ்வு-எங்கள் உரிமை எங்களுக்குக் கிடைக்க உதவி செய். இதைவிட இவர்களிடம் இருந்து நாம் தப்பிக் கொள்வது கடினமே.
வலம்புரி தலையங்கம

கருத்துகள் இல்லை: