சனி, 18 செப்டம்பர், 2010

மாவோயிஸ்டுகள் பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை

மாவோயிஸ்டுகள் சாதித்தது என்ன?
- நிர்மலன்சு முகர்ஜி
இதுநாள் வரையிலும் மத்திய இந்தியாவிலுள்ள தண்டகாரண்யா பகுதியில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளும், அணுகுமுறையும் எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அவர்களின் இரண்டு மூத்த தலைவர்கள் மற்றும் இரண்டு ஆதரவாளர்கள் எழுதியுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளது. இந்த நான்கின் அடிப்படையில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மாவோயிஸ்டுகள் இப்பகுதியில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. அரசு கடந்த காலத்தில் பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவர்கள் ஆதிவாசிகளின் நலனுக்காக ஏதேனும் செய்திருக்கிறார்கள் என்பதைவிட ஆதிவாசிகளை தங்களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஆவணம்
மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள மேலே குறிப்பிட்ட நான்கு ஆவணங்களில் இரண்டு, மாவோயிஸ்டுகளை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இரண்டு அறிவு ஜீவிகளுடையது. இந்த இருவருமே மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதியின் உள்ளே சென்று அவர்களிடம் கிடைத்த தகவல்களை சேகரித்து வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஆவணங்களும் 2010ல் வெளியானது. ஒருவர் அருந்ததி ராய், மற்றொருவர் நவ்லக்கா. மற்ற இரண்டு ஆவணங்களை பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் கணபதி மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் ஆசாத் ஆகிய இருவரின் பேட்டி. அறிவு ஜீவிகள் எழுதியுள்ள இரண்டு நீண்ட கட்டுரைகளிலும் மாவோயிஸ்டுகளின் அடிப்படையான நோக்கங்களை அவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை.
2009ல் அருந்ததி ராய் விமர்சனப்பூர்வமான சில குறிப்புகளை எழுதியிருந்தார். இப்போது அது இல்லை. மேலும் இந்த இரண்டு பேரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவர்களின் அரசியல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை நேரிடையாக மாவோயிஸ்டுகளின் நோக்கங்களையும் நடைமுறையையும் ஆதரிப்பவையாக இருக்கின்றன. இந்திய அரசின் மாவோயிஸ்டுகள் மீதான விமர்சனத்திற்கு அப்பால் இந்த கட்டுரையானது மாவோயிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் ஆவணங்களை அடிப்படையாக கொண்டது. மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஆசாத் “மக்களின் நலன்தான் மாவோயிஸ்டு போராளிகளின் முன்னுரிமை கடமை” என்று தெரிவித்திருக்கிறார். கிஷன்ஜி என்கிற கோடீஸ்வர ராவ் தன்னுடைய கட்சி “பொதுமக்களின் பொது நன்மைக்காக” பணி செய்வதாக தெரிவித்திருக்கிறார். இவை இரண்டையும் பார்க்கிற போது மாவோயிஸ்டுகள் பஸ்தார் காடுகளுக்குள் உள்ள ஆதிவாசி மக்களின் பொது நன்மைக்காக செயல்படுவதாக தோன்றும். மாவோயிஸ்டுகள் இந்த காடுகளுக்குள் 25 ஆண்டுகளுக்கு முன்பாக தளம் அமைத்துக்கொண்டனர். 2005ம் ஆண்டில் தான் அவர்கள் மீது அரசின் தாக்குதல் தொடங்கியது. முந்தைய 25 ஆண்டுகளில் இந்த பகுதியில் அவர்கள் கால் ஊன்றிய தோடு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த கால் நூற்றாண்டு காலத்தில் அவர்கள் ஆதிவாசிகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: