புதன், 15 செப்டம்பர், 2010

எகானமிஸ்ட் இதழ் மீண்டும் பறிமுதல்

இலங்கையில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை கொண்ட கட்டுரையை பிரசுரித்திருந்த எகானமிஸ்ட் வார இதழின் பிரதிகளை இலங்கை அதிகாரிகள் விநியோகிக்க முடியாதபடி பறிமுதல் வைத்துள்ளனர்.எகானமிஸ்ட் இதழின் பிரதிகள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இதழ்கள் தாமதமாகவே விடுவிக்கப்பட்டதன் காரணமாக இதழை விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது. நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன. இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை எகானமிஸ்ட் சஞ்சிகையின் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் சமீபத்திய உதாரணம். (மேலும்

கருத்துகள் இல்லை: