பிபிசி ஊடகத்திற்கோ, வேறு ஊடகங்களுக்கோ நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒருங்கமைப்பு செயலாளர் ஏ.ஜி.குணவர்த்தனவை தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஊடகமும் நல்லிணக்குழுவின் ஆணைக்குழுவின் சாட்சியமளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய ஆணையாளர் லக்ஷ்மன் உலுகல்லவை தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவரும் ஊடகங்களுக்கு எதுவித தடையும் விதிக்கபடவில்லை எனவும் தேவையாயின் நேரில்சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக வலையமைப்பான பி.பி.சி இன்று கிளிநொச்சியில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வில் ஊடக சார்பிலாக கலந்துகொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கிய விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளது.மேற் குறிப்பிட்டவாறு பிபிசி செய்திச் சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அச் செய்தியில் தாம் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் தினத்தில் ஊடகத்தின் சார்பாக தாம் கலந்துகொள்ளவென விண்ணப்பித்த போது பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அதனை நிராகரித்ததாகவும், அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக