வவுனியா நகரசபையினை கலைத்து விடுமாறு அதன் தலைவர் எஸ்.எம்.ஜீ.நாதன் வட மாகாண ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரசபைக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றபோது நகரசபை உறுப்பினர்கள் 11 பேர் நகரசபைத் தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபையை விட்டு வெளியேறினர். இதனையடுத்து நகரசபை மைதானத்தில் கறுப்புப் பட்டியணிந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
நகரசபை உறுப்பினர் தனித்து செயற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கை கடைபிடிப்பதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நகரசபை தலைவர் தொடர்பில் 29 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டுள்ள போதிலும் இது தொடர்பில் கலந்துரையாட நகரசபைத் தலைவர் எஸ்.எம்.ஜீ.நாதன் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசம் உள்ள நிலையில் கூட்டமைப்பின் 4 நகரசபை உறுப்பினர்களும் தலைமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோனராதலிங்கம் ஆகியோர் பிரச்சினைக்கு குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக