நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (12) காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
இவ்வுற்சவத்தில் எதிர்வரும் 16ம் திகதி புதன்கிழமை இரவு முத்துச்சப்பறமும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கைலைக் காட்டிசியும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும் 21ம் திகதி திங்கட்கிழமை காலை சிவபூசை கைலைக்காட்சியும் இரவு திருமஞ்சமும் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் விசேட கருடசர்ப்ப பூசையும் வாயுபட்சணி நாகம் வீதியுலாவும் இரவு பூந்தண்டிகையும் 24ம் திகதி வியாழக்கிழமை பகல் கைலைக்காட்சியும் இரவு சப்பறமும் 25ம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 9.30 மணிக்கு இரத்தேற்சவமும் மறுநாள் சனிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இரவு திருவூஞ்சல் மற்றும் கொடியிறக்கமும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக