வெள்ளி, 18 ஜூன், 2010

ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் சிக்கின,ரயில் பாதை தகர்ப்பு நடந்த இடத்திற்கு அருகே

விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையம் அருகே ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே உள்ள மதுரைப்பாக்கம் சுடுகாட்டில் இந்த வெடிபொருட்கள் சிக்கின. இந்த இடம் பேரணி ரயில் நிலையப் பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட பகுதிக்கு சற்றுதொலைவில் வெடிபொருட்கள் பெருமளவில் கிடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரைப்பாக்கம் சுடுகாட்டு பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 248 பெண்கள் உள்பட 255 பேர் மயானம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கல்யாணி என்ற பெண் சங்க ர்மல்லையா என்பவரது தோட்டத்தின் வேலை அருகே மரங்கள் அடர்ந்த புதரில் வெடிபொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.

தகவல் அறி்ந்ததும் விக்கிரவாண்டி போலீஸார் விரைந்து வந்தனர். அங்கிருந்த மூட்டையில், 150 டெட்டனேட்டர்கள், 150 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஒரு எலக்ட்ரிக் பேட்டரி ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

 இதைத்தானே புலிப்பினாமிகள் விரும்புகின்றன.சீமான் போன்ற இன்னும் ஒருவர் இல்லை இல்லை இவர் ஒருவரே போதும் மீதி பிரச்சாரங்களை விகடன் குமுதம் வியாபாரிகள் விதைப்பார்கள்.மக்களே உஷார் இப்படித்தான் இலங்கையில் பயங்கரவாதிகள் உருவானார்கள் முளையிலேயே கில்லாவிடில் விஷ விருட்சம் வளர்ந்த பின்பு டூ லேட் ஆகிவிடும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Be alert South Indian folks. Don't let the terrorist spoil your normal life just like they did in your neighbor country.Be aware of them!

பெயரில்லா சொன்னது…

Be alert South Indian folks. Don't let the terrorist spoil your normal life just like they did in your neighbor country.Be aware of them!