யாழ்தேவி ரயில் சேவைக்கான முன்பதிவினை கையடக்க தொலைபேசி மூலம் செய்துகொள்ளக்கூடிய புதிய முறையொன்றினை இலங்கை புகையிரத திணைக்களம் அறிமுகம் செய்கின்றது. எதிர்வரும் ஆவணி மாத பாடசாலை விடுமுறையின்போது பயணிக்கவுள்ள பயணிகள் பயனடையும் வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து இவ் முன்பதிவுமுறை நடைமுறைக்குவரும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை யாழ்தேவி நாளாந்தம் செயற்பட்டு வருகின்றது. தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான புதையிரத பாதை திருத்தவேலைகள் முடிவுறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்துள்ள புகையிரத திணைக்களம் திருத்தவேலைகள் முடிவுற்றவுடன் கொழும்பு காங்கேசன்துறைச் சேவை ஆரம்பமாகும் என அறிவித்துள்ளது.
கண்டி இன்ரசிற்றி ரயில் சேவைக்கான முன்பதிவினை 365 என்ற இலக்கத்தினை அழுத்தி கையடக்க தொலைபேசிளுடாக செய்து கொள்ளமுடியும் எனவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக