இயக்குனர் ஹரியால் இயக்கப்பட்ட இப்படம், சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தினரால் உலகமெங்கும் திரையிடப்பட்டது.
சமீபத்தில், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், அயன், ஆதவன் ஆகிய மூன்று படங்களும் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றன. இந்தக் ஹாட்ரிக் ஹிட்டினைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த சிங்கம் படம் சூரியாவிற்கு ’’ஹாட்டாப் ஹிட்’’டினைத் தந்துள்ளது. சன் பிக்சர்ஸரால் உலகமெங்கும் திரையிடப்பட்ட சிங்கம் கனடாவில் வசூல் சாதனை புரிந்துள்ளது.
கனடா டொரோண்டோ நகரில், சிங்கம் திரைப்படம் வார இறுதி மூன்று நாள் வசூலாக சுமார் 50,000டாலர்களுடன் பாக்ஸ் ஆபீசில் 8ம் இடம் பிடித்துள்ளது.
இதுவரை வட அமெரிக்காவின் மொத்த 1,60,000 டாலர் வசூலில் சுமார் 25% கனடாவில் என்பது குறிப்பிடத்தக்கது.டொரோண்டோவில் வெறும் இரண்டே இரண்டு திரை அரங்குகளில் வெளியாகி, ஆங்கிலப் படங்களை வசூலில் முந்தி, ஒரு தமிழ் படம் நிற்பது; தமிழ்த் திரைத்துறையினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியில் சூர்யா இருக்கும் வேளையில், சிங்கம் படம் கனடாவின் பாக்ஸ் ஆபீசில்
இடம் பிடித்தது அவரை இன்பத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.சூரியாவிற்கு ஆண்குழந்தை ’’ஹார்ட்டாப் கிஃப்ட்’’ . சிங்கம் படம் ’’ஹாட் டாப் ஹிட இதற்கு முன், சிங்கம் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 21 வது இடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது. 28,29,30 ஆகிய மூன்று தினங்களில், வெளியிட்ட ஒன்பது இடங்களில் இப்படம் 54,230 10ptபவுண்ட்கள் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 37.42 லட்சங்கள் ஆகும்.
தற்போது புரிகிறது ஏன் தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பெயர் தமிழர்களின் குரலாகவே ஒலிக்கிறார்கள் என்பது.
வெளிநாட்டு வெங்காயங்களின் வெறுமை இருக்கும் வரை புலிமாபியா இல்லாவிடில் என்ன எதோ ஒருவரிடம் எமாறவேண்டும். இல்லாவிடில் தூக்கம் வராது.என்ன செய்ய செய்த கருமம் அப்படி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக