செவ்வாய், 15 ஜூன், 2010

அம்பானி சகோதரர்கள்,எலியும் பூனையுமாக இருந்த அம்பானி சகோத ரர்கள் இப்போது திடீர்

அம்பானி சகோதரர்கள்
சண்டையும் சமாதானமும்!
எதிரும் புதிருமாக இருக்கும் அரசியல் கட்சிகள் திடீர் கூட் டணி அமைப்பது
போல, எலியும் பூனையுமாக இருந்த அம்பானி சகோத ரர்கள் இப்போது திடீர்
சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் செய்து வரும் தொழிலில்
இன்னொருவர் அத்து மீறி நுழையக்கூடாது என இருவரும் ஏற்கெனவே 2005-ல் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருந்தார்கள். இப்போது அந்த ஒப்பந்தத்தை ஓரங்கட்டி விட்டு, யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும செய்யலாம் என்று புதிய விதியையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

சகோதரர்களின் இந்த இணைப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின முதலீட்டாளர்களுக்குச்சாதகமான விஷயம்தான். இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில இன்னும் வேகமாகச் செல்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஒருதரப்பினர்.ஆனால் இன்னொரு தரப்பினரோ, 'இந்த திடீர் சமரசத்தின் மூலம் ரிலையன்ஸ்அதிபர்கள் தங்கள் நலனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய,முதலீட்டாளர்கள் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்றுவிமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சேர்வதும் பிரிவதும் ரிலையன்ஸ் ஸ்டைல்!
''ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாறு தெரியாதவர் களே இப்போது
ஏற்பட்டிருக்கும் சமரசத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தனக்குத் தேவை என்கிறபோது பிரிவதும், மீண்டும் சேர்வதும் அந்த
நிறுவனத்தின் ஸ்டைல். உதாரணமாக, 1990-களிலேயே ரிலையன்ஸ் பெட்ரோலியம்என்கிற நிறுவனத்தைத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இதனை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைத்தது. திரும்பவும் சில ஆண்டுகளுக்கு பிறகுரிலையன்ஸ் பெட்ரோலியம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கியது. 2009-ல் மீண்டுமரிலையன்ஸ் நிறுவனத்துடன் அதை இணைத்தது. அம்பானி இறந்தபிறகு சிலபல காரணங்களுக்காக 2005-ல் இரு சகோதரர்களும் பிரிந்தனர். நடுவே கடுமையாகசசண்டையும் போட்டுக் கொண்டனர். இப்போது மீண்டும் சேர்ந்தால்தான் சிலவிஷயங்களைச் சாதிக்க முடியும் என்கிறபோது திரும்பவும் சேர்ந்துவிட்டனர்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையே!'' என்கிறார் அந்த ஜாம்பவான்.
சண்டையும் சமரசமும் நாடகமா?
''அம்பானி சகோதரர்கள் சண்டைப் போடுவதையும் பிறகு சமாதானம் அடைவதையுமஅப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது. வெளியே சொல்லப்படாமல் அதில் ஒளிந்துகொண்டிருக்கும் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறாரஇன்னொரு ஷேர் மார்க்கெட் நிபுணர்.
''திருபாய் அம்பானி காலமான பிறகு அவர் உருவாக்கிய நிறுவனத்தை அவர்
வாரிசுகள் பிரித்துக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் அதற்கு முதலீட்
டாளர்கள் எளிதில் அனுமதி கொடுத்துவிட மாட்டார்கள். காரணம், ரிலையன்ஸ்என்பது தனிப்பட்ட நிறுவனமல்ல. அது ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி.

சகோதரர்கள் பிரிய நினைப்பதை முதலீட்டாளர் களிடம் எப்படி எடுத்துச்
சொல்லிப் புரிய வைப்பது?
சிம்பிள். அண்ணன், தம்பி சண்டை போடுகிற மாதிரி ஆக்ஷனைக் கொடுத்தால்
போதும்; முதலீட்டாளர்கள் பயந்துபோய் சண்டைப் போடாமல் எப்படியாவது
சமரசமாகப் பிரித்துக் கொண்டால் தங்கள் முதலீடு தப்பிவிடுமே என்ற நிலைக்கு
வந்துவிடுவார்கள். சரி, ரிலையன்ஸ் பிரிந்தாயிற்று. இப்போது மீண்டும் சேர
நினைத்தால் அதற்கு என்ன காரணம் சொல்வது? இருக்கவே இருக்கிறது இயற்கை
எரிவாயு பிரச்னை. அதைக் காரணம் காட்டி மோதிக்கொண்டால் அரசாங்கம் எரிவாயு
சம்பந்தமாக கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிடும் நிலை ஏற்படலாம். அப்போது
முதலீட் டாளர்கள், 'எப்படியாவது இருவரும் சமரசமாகப் போய்விட்டால் நல்லது
என்ற முடிவுக்கு வந்துவிடு வார்கள். பிஸினஸை கரைத்துக் குடித்த அம்பானி
சகோதரர்களுக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி'' என்கிறார் அவர்.
வெளிவராத ஒப்பந்தம்!
''அம்பானி சகோதரர்கள் இத்தனை நாளும் சண்டை போட்டுக்கொண்டது 2005-ல்
செய்து கொண்ட குடும்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான். ஆறு பக்கங்கள்
கொண்ட இந்த குடும்ப ஒப்பந்தத்தை இதுவரை யாரும் கண்ணில் பார்த்த மாதிரித்
தெரியவில்லை. இந்த ஒப்பந்தம் ஏன் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குக்கூட இந்த ஒப்பந்தம்
காட்டப்படவில்லையே! ஏன்?''
என்று கேட்கிறார் பங்குச் சந்தையின் இன்னொரு பெரும்புள்ளி.
''இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு
முன்பு ஏற்பட்ட இந்த குடும்ப ஒப்பந்தத்தை இப்போது எதன் அடிப்படையில்
ரத்து செய்திருக்கிறார்கள்? வேண்டாம் என்கிறபோது இந்த ஒப்பந்தத்தை ரத்து
செய்து கொள்ளலாம் என்கிற அடிப்படையில் தானே ரத்து செய்திருக்க முடியும்?
இப்படி ஒரு ஷரத்து ஒப்பந்தத்தில் இருப்பதை ஏன் இதற்கு முன்பு
சொல்லவில்லை? எதிர்காலத்தில் இரு சகோதரர்களும் சமரசமாகவும் செல்ல
வாய்ப்பிருக்கிறது என்கிற விஷயம் முதலீட்டாளர்களுக்குத் தெரிவது அவசியமா,
இல்லையா?'' இப்படி பதிலில்லாத பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறார்
அவர்.
அரசாங்கம்தான் காரணமா?
''ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய
இயற்கை எரிவாயுவை என்ன விலைக்குத் தருவது என்கிற பிரச்னையில் இரு
சகோதரர்களும் விட்டுக் கொடுக் காமல் இருந்தால், அரசாங்கம் ஏற் கெனவே
கொடுத்த அனுமதியை மீண்டும் வாபஸ் பெற வாய்ப்புண்டு. அப்படி வாபஸ் பெறும்
பட்சத்தில் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு மட்டுமல்ல, ரிலையன்ஸ்
நிறுவனத்துக்கும் மிகப்பெரிய இழப்பு உருவாகும். இது மாதிரியான ஒரு ஆபத்து
வந்துவிடக்கூடாது என்ப தற்காக இரு சகோதரர்களும் கருத்து மாறுபாட்டை
மறந்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்கெனவே கொடுப்பதாக
அரசாங் கம் சொல்லி இருந்த எரிவாயுவை கொடுத்தே ஆகவேண்டும் என இரு
சகோதரர்களும் அரசுத் தரப்பில் பிரதமர் முதல் முக்கிய அமைச்சர் களையும்
சந்தித்திருக்கிறார்கள். இப்போது ஏற்பட்டிருக்கும் சமரசத் துக்குக்
காரணம், அம்பானி சகோதரர்களின் அம்மா கோகிலாபென் என்பதைவிட
அரசாங்கம்தான்!'' என்கிறார் டெல்லியில் உள்ள இன் னொரு முக்கியப் புள்ளி.

அம்பானி சகோதரர்கள் ஒன்று சேர்ந்திருப்பதற்கான காரணம் எது வேண்டுமானாலும்இருந்து விட்டுப் போகட்டும். அதனால் அந்த நிறுவனத்தின்முதலீட்டாளர்களுக்கும் இந்திய பிஸினஸ் உலகத்துக்கும் நன்மை ஏற்பட்டால்
நல்லதுதான்.!
- ஏ.ஆர்.குமார்.

கருத்துகள் இல்லை: