முதலில் கேரளா ...
பிற மொழிப் படங்களை இரு வாரங்களுக்குப் பிறகே கேரளாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக பெரும் சவாலைச் சந்தித்துவரும் மலையாளத் திரைப்படங்களை காக்க இந்த ஏற்பாடு.
இந்த கட்டுப்பாட்டை அலட்சியம் செய்துவிட்டு, பிக் பிக்சர்ஸ் 'கைட்ஸ்' படத்தை கேரளா முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த கேரள திரையுலகினர் ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரெட் கார்டு விதித்துவிட்டனர். இந்த பிக் பிக்சர்ஸ்தான் கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், ராவணன் படத்துக்கு விநியோகஸ்தர்கள்.
எனவே, உலகெங்கும் ராவணன் அல்லது ராவண் அல்லது வில்லன் வெளியாகும்போது, கேரளாவில் மட்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் ரிலீஸாக முடியும். அதுவும், ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்டால்!
அடுத்து கர்நாடக சிக்கல்...
இங்கு பிற மொழிப் படங்களை மொத்தம் 45 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
அதன்படி ராவணனுக்கு 45 தியேட்டர்களைத் தந்துள்ளது கர்நாடக திரைத்துறை. ஆனால் மணிரத்னமும் அவர் மனைவியும், "இந்தப் படம் மூன்று மொழிப் படம். ராவண், ராவணன், வில்லன் ஆகிய மூன்று படங்களுக்குமே தனித் தனி சென்சார் சான்று, நெகடிவ்கள் உள்ளன. எனவே மூன்றுக்கும் சேர்த்து 135 தியேட்டர்கள் வேண்டும்" என்று பிலிம்சேம்பரில் கேட்டுப் பார்த்தனர். ஆனால் அசைந்து கொடுப்பதாக இல்லை கர்நாடக சினிமா நிர்வாகிகள்.
'எங்களைப் பொறுத்தவரை மூன்றும் ஒரே படம்தான். மணிரத்னம் இயக்கி, மெட்ராஸ் தயாரித்துள்ள ஒரு படம் இது. எனவே 45 தியேட்டர்களை ஒதுக்குகிறோம். உங்கள் இஷ்டப்படி மூன்று படங்களையும் திரையிட்டுக் கொள்ளுங்கள்.." என்று மடக்க, 'எந்திரனுக்கும் இப்படித்தான் செய்வீர்களா?' என்று சம்பந்தமே இல்லாமல் 'பற்ற வைத்துள்ளனர்'.
அந்தப் படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம். உங்கள் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவர்கள் கண்டிப்பு காட்ட, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
இப்போது ராவண் இந்திப் படத்தை 24 தியேட்டர்களிலும், ராவணன் தமிழ்ப் படத்தை 16 தியேட்டர்களிலும், வில்லன் தெலுங்குப் படத்தை 5 தியேட்டர்களிலும் திரையிடவுள்ளனராம்.
பெங்களூர் மல்டிப்ளெக்ஸ்களில் கட்டணம் எக்கச்சக்கம். சென்னையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேல். அதிக தியேட்டர்களில் மூன்று மொழிகளிலும் வெளியிட்டு கலெக்ஷனை அள்ளும் பிக் பிக்சர்ஸ் மற்றும் சுஹாஸினி திட்டங்கள் இங்கும் எடுபடவில்லை!
பதிவு செய்தது: 15 Jun 2010 3:28 pm
ரஜினி கன்னடர் எனவே அவருக்கு எல்லா தியேட்டர்களையும் தருவோம் .தமிழ்நாட்டில் இருந்துகொண்டு அவர் கர்நாடகவுக்கு அதரவாக செயல்படுவதை பாராட்டி இந்த முடிவு .
பதிவு செய்தது: 15 Jun 2010 3:13 pm
எந்திரன் எங்கள் அன்பு நண்பர் ரஜினி நடித்த படம். அவருக்கு கட்டாயம் 150 தியேட்டர்களைத் தருவோம்.
[ Read All Comments ] [ Post Comments ]