புதன், 16 ஜூன், 2010

பெற்றோரை அவமதிப்பதில் சென்னை முதலிடம்!



 உலக முதியோர் நலன் விழிப்புணர்வு தினத்தையொட்டி கெல்ப் ஏஜ் இந்தியா என்ற அமைப்பு எடுத்த புள்ளி விவரம் சென்னை வாசிகளை உலக அரங்கில் தலைகுனிய வைத்திருக்கிறது.

அந்த அமைப்பு,  சென்னை நகரில் வாழும் வயதான பெற்றோர்களிடம் ’நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை
முன்வைத்திருக்கிறது.
இந்த  கேள்விக்கு  71.4 சதவீதம் பெற்றோர்கள்,  ’எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை’ என்று சொல்லி கண்கலங்கியுள்ளார்கள்.

  இதில் 58.9 சதவீதம் பெற்றோர்கள்,   ’மருமகள் எங்களை மதிக்கவில்லை மோசமாக திட்டுகிறாள், மகனும் மருமகளுடன் சேர்ந்து அவமானப்படுத்துகிறான்’ என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் வாழும் முதியவர்களில் 56 சதவீதம் பேர்,  தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழவில்லை. தனிமையிலோ,
அல்லது முதியோர் காப்பகத்திலோ தான் வாழ்கிறார்கள் என்று இந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

’மகனை எப்படி எல்லாம் வளர்த்தேன். மருமகளுடன் சேர்ந்து அவனும், எங்களை அவமதிப்பதை தாங்க முடியவில்லை. மனதை
புண்படுத்தும் வார்த்தைகளை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட நிம்மதி தேடி முதியோர் இல்லம் வருகிறோம்’ என்று முதியோர் இல்ல பெரியோர்கள் தெரிவித்துள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை: