வியாழன், 17 ஜூன், 2010

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து
பாலக்கோடு அருகே நடந்த திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி விபத்தாகி 18 பேர் பலியானார்கள். 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி. சிவணான்டி,
சரக்கு வண்டியில் ஆட்களை ஏற்றிச் செல்வதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும்தான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. சரக்கு வண்டிகளில் ஆட்களை ஏற்றுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த வாகன உரிமையாளரை கைது செய்வதுடன், டிரைவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் செக் போஸ்ட் அதிகரிக்கப்படும். அப்போது அந்த சாலைகளில் செல்லும் சரக்கு வாகனங்களில், ஆட்களை ஏற்றினால் அப்பகுதி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்கள். அப்படி செய்யாவிட்டால், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு மண்டலத்தில் யாராவது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், அந்த விபரங்கள் பற்றி தெரிந்துகொள்ள எஸ்.எம்.எஸ். வசதி நாளை முதல் தொடங்கப்படுகிறது என்றார்.

கருத்துகள் இல்லை: