இலங்கைக்கு படிப்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று சர்வதேச நிறுவனங்களுக்கு கடும்தொனியில் தெரிவித்த ஐப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி, ஜப்பானும் உதவி வழங்கும்போது உதவிபெறும் நாடுகள் மீது தான் விரும்புவதை திணிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகாஷி, நேற்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீரிஸை சந்தித்த பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது, ஜப்பான் இலங்கைக்கு 39 பில்லியன் ஜப்பானிய யென்னை வழங்கியது என்றும் அரசாங்கத்துடன் பூரண ஆலோசனை நடத்திய பின்னர் அந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
20ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அகாஷி, இலங்கை இதுவரை சமாதானத்தை நோக்கி பெருமளவு முன்னேறியுள்ளது என்றும் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள், நல்லிணக்கம் ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறித்து தாம் பாராட்டுவதாகவும் கூறினார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக் குறித்து அபிப்பிராயம் கேட்டபோது, இலங்கை உரிய நடைமுறைகளை பின்பற்றும் என்றும் நாட்டுக்கு எது சிறந்ததோ அதனை செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக