வியாழன், 17 ஜூன், 2010

டக்ளஸ் தேவானந்தா. குறுகிய அரசியல் காரணங்களுக்காகவே தொடரப்பட்டுள்ள வழக்கு செல்லாது,



எனக்கு இந்திய அரசு பொது மன்னிப்பு தந்து விட்டது. எனவே என் மீது சென்னை கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு [^] செல்லாது, என்னை அங்கு ஆஜர்படுத்தவும் முடியாது என்று கூறியுள்ளார் சென்னை கோர்ட்டால் தலைமறைவுக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

1986 ல் இடம் பெற்ற சென்னை சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவம் [^] தொடர்பில் 1987 ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி எனக்கு இலங்கை அதிபரால் மன்னிப்பு வழங்கப்பட்டது.

1990 ம் ஆண்டு மே மாதம் நான் இந்தியா [^]வில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது இது தொடர்பான ஆவணத்தில் கையெத்திட்டேன்.

முன்னாள் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் விஷயத்தில் இலங்கைக்கு இந்திய அரசு உதவும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1989 முதல் 1990 வரையான காலப்பகுதிகளில் சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்தபோது மேற்படி வாசகத்தை எனது வக்கீல் எனக்கு வாசித்து காட்டினார். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அடுத்து எனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை.

அதன் பின்னர் சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சென்னையிலோ அல்லது வேறெந்த இடத்திலுமோ எவரும் பிரச்சினை கிளப்ப வில்லை.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் நான் தனிப்பட்ட மற்றும் அரசியல் [^] காரணங்களுக்காக பல தடவை இந்தியா சென்று வந்துள்ளேன்.

குறுகிய அரசியல் காரணங்களுக்காகவே இந்த விஷயம் இப்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது செல்லுபடியற்ற ஒரு வழக்கு. இது தொடர்பாக என்னை சென்னை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: